For Daily Alerts
Just In
பி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்திலிருந்து 8.8 % ஆக உயர்த்துவதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.8 சதவீதத்தில் இருந்து 8.9 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய டிரஸ்டிஸ் வாரியம் (CBT) முடிவு செய்த நிலையில், இதை மத்திய நிதி அமைச்சகம் ஏற்க மறுத்துவந்தது. 8.7 சதவீத வட்டியே அளிக்க முடியும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், பல்வேறு மத்திய வர்த்தக சங்கங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து 8.8 சதவீதமாக வட்டியை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!