For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன இந்தியா இப்படியா சிவப்பாவா இருக்கும்.. ஐரோப்பாவின் செயற்கைகோள் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்

ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள்- வீடியோ

    டெல்லி: ஐரோப்பா அனுப்பிய செயற்கைகோளின் ஆராய்ச்சி முடிவுகள் இந்தியா குறித்த புதிய உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நிறம் மற்ற நாடுகளை விட வித்தியாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஐரோப்பா கடந்த சில வருடங்களுக்கு முன்பு ''சென்டினல் 5பி'' என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. உலக நாடுகளின் அமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக இந்த செயற்கைக்கோளை அனுப்பியது.

    உலகம் எப்படி இருக்கிறது, எந்த சூழ்நிலையில் எப்படி மாறுகிறது என்று இது ஆராய்ச்சி செய்யும். அதேபோல் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் இது ஆராய்ச்சி செய்யும்.

    ஆராய்ச்சி செய்தது

    ஆராய்ச்சி செய்தது

    இந்த செயற்கைகோள் காலை மற்றும் இரவு என்று இரண்டு விதமான காலநிலையில் ஆராய்ச்சி செய்துள்ளது. இரண்டு விதமான காலநிலையிலும் கடந்த சில மாதங்களாக வெவ்வேறு பருவநிலையில் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளது. இதனால் இந்த ஆராய்ச்சி 1 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்துள்ளது.

    இந்தியா வேறுமாதிரி

    இந்தியா வேறுமாதிரி

    இந்த ஆராய்ச்சி முடிவுகளின் படி, இந்தியா மட்டும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள் நீல மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் போது இந்தியா மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதேபோல் ஆப்ரிக்காவில் சில நாடுகளும் சிவப்பு நிறத்தில் மின்னி இருக்கிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    மற்ற நாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் கார்பன், ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் அந்த நாடுகள் பச்சை நிறத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பார்மால்டிஹைட் அதிகமாக இருப்பதால், சிவப்பு நிறத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னொரு காரணம்

    இன்னொரு காரணம்

    இதற்கு இன்னொரு காரணம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக விவசாயம் நடக்கும் பகுதியில் இந்த பார்மால்டிஹைட் அதிகம் உள்ளது. அதேபோல், இயற்கையாக விறகுகளை பயன்படுத்தினாலும் இந்த பார்மால்டிஹைட் உருவாகும். இதனால் இந்தியா செந்நிறத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Europe Satellite sends a bizarre image of India from space with a different color.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X