For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நான் தரிசனம் செய்தபிறகு கோவில் கழுவிவிடப் பட்டது: பீகார் முதல்வருக்கு நேர்ந்த கொடுமை

Google Oneindia Tamil News

பாட்னா: சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சிலர் தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக வேதனைத் தெரிவித்திருந்த பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, ‘தான் தரிசனம் செய்த பிறகு கோவிலை கழுவி விட்டனர் என்பது உண்மை தான்' என இன்று விளக்கமளித்துள்ளார்.

தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து உலக நாடுகள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆன்போதும், ஆங்காங்கே இலைமறை காயாக சில தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

Even Today People Treat me as an Untouchable: Bihar CM

கல்வியரிவு இல்லாத ஒடுக்கப்பட்ட ஏழைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற பிம்பத்தை உடைப்பதாக அமைந்துள்ளது பீகார் மாநில முதல்வரின் சமீபத்திய பேச்சு.

சமீபத்தில் பீகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, முதல்வராக பதவியேற்ற பிறகும் தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே சில சக்தி வாய்ந்த மக்கள் நடத்துவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-

தீண்டத்தகாதவராக....

நான் மாநில முதல்வராக இருந்தாலும் கூட இப்போதும் கூட சில சக்தி வாய்ந்த மக்கள் என்னை தீண்டத்தாகாதவாராகத்தான் நடத்துகின்றனர். ஏனெனில் நான் மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தான் இவ்வாறு செய்கின்றனர்.

கோவிலைக் கழுவினர்...

மாதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று நான் கோவிலுக்கு சென்றேன். ஆனால் கோவில் சென்று திரும்பிய பிறகு கோவிலையும் அங்குள்ள சிலையும் கழுவப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது.

காலைப் பிடிக்கின்றனர்...

சில வேலைகளை முடித்து கொள்வதாகவும் அல்லது சில சலுகைக்களுக்காவும் எனது காலை மக்கள் தொடுகின்றனர். ஆனால் சமுக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்னும் தீண்ட தகாதவராகத்தான் நடத்துகின்றனர்.

அவமானம்...

இது மகாதலித் வகுப்பை சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவது செயல் ஆகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுப்பு...

மாநில முதல்வர் ஒருவர் தீண்டத்தகாதவராக நடத்தப்பட்ட விதம் பெரும் பூதாகரமாக வெடித்தது. ஆனால், முதல்வரின் இக்குற்றச்சாட்டை அவருடன் சென்ற பீகார் அமைச்சர்கள் ராம் லட்சுமணன் ராம் ராமன் மற்றும் நிதிஷ் மிஷ்ரா ஆகியோர், ‘அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை' என மறுப்புத் தெரிவித்தனர்.

உண்மை...

இந்நிலையில், தனது முந்தைய பேச்சிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பீகார் முதல்வர். அப்போது அவர், ‘தன் வாழ்க்கையில் பொய் பேசியதில்லை என்றும், தான் சென்று வந்த பிறகு அந்த கோவில் கழுவப்பட்டது உண்மை என்றும் கூறியுள்ளார்.

விசாரணை...

மேலும், உள்ளூர் அதிகாரிகள் மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

English summary
Bihar Chief Minister Jitan Ram Manjhi Sunday revealed that he is still treated as an "untouchable" by some "powerful people" as he is a poor Mahadalit, the most backward among the community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X