For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒருபக்கம் ஒளிரும் குஜராத்!… மறுபக்கம் நோஞ்சான் குழந்தைகள்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எடைகுறைந்து காணப்படுவதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரின் ( சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்த மாநிலம் என்று அம்மாநில முதல்வரும், பாரதீயஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அம்மாநிலத்தின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள தகவலை அம்பலப்படுத்தி உள்ளது சிஏஜி அறிக்கை.

குழந்தை வளர்ச்சி திட்டம்

குழந்தை வளர்ச்சி திட்டம்

குஜராத் மாநிலத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்படுவதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியது.

அங்கன்வாடி மையங்கள்

அங்கன்வாடி மையங்கள்

மாநிலம் முழுவதும் 75,480 அங்கன்வாடி மையங்கள் தேவையாக உள்ள நிலையில், 52,137 மையங்களுக்கு ( 69 சதவீதம்) மட்டுமே அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலும் 50,225 மையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

திட்டத்தால் பயனில்லை

திட்டத்தால் பயனில்லை

இந்த திட்டத்தின் கீழ் 2 கோடியே 23 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் பயனாளிகளாக கண்டறியப்பட்ட நிலையில், அவர்களில் சுமார் 63.37 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்றும், இதற்கு போதுமான அங்கன்வாடி மையங்களை அரசு அமைக்காததே காரணம் என்றும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

96 நாட்கள்தான்

96 நாட்கள்தான்

மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தது 300 நாட்களாவது பயனாளிகளாக கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 96 நாட்கள் மட்டுமே ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது.

3ல்1 குழந்தை

3ல்1 குழந்தை

இதனால் குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை எடை குறைந்த, ஊட்டச்சத்து குன்றிய குழந்தையாக காணப்படுகிறது.

மாநில அரசுக்கு அக்கறையில்லை

மாநில அரசுக்கு அக்கறையில்லை

கூடுதல் மையங்கள் அமைக்க மத்திய அரசு தரப்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டபோதும், மாநில அரசு அதில் அக்கறை காண்பிக்கப்படவில்லை என சிஏஜி அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது.

அடிப்படை வசதியில்லை

அடிப்படை வசதியில்லை

மேலும் செயல்பாட்டில் உள்ள 40 சதவீத அங்கன்வாடி மையங்களிலும் அடிப்படை வசதிகளான கட்டடம், பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எந்த திட்டமும் இல்லை

எந்த திட்டமும் இல்லை

அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து கூடுதல் திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த 2008 ஆம் ஆண்டே மத்திய அரசு, குஜராத் மாநில அரசுக்கு கடிதம் எழுதியபோதிலும், குஜராத் அரசு அது தொடர்பாக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை என மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Though Chief Minister Narendra Modi has been waxing eloquent about the Gujarat model of development, the latest report of the Comptroller and Auditor General (CAG) of India as well as the State government’s own admission speak of malnourished and underweight children in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X