For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவிஸில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல.. அருண்ஜெட்லி விளக்கம்

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.

2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும். 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது.

Everything is not Black Money, Arun Jaitley gives a bizarre explanation on Swiss Bank issue

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 டிசம்பர் வரை மிகவும் குறைவாக இருந்த கருப்பு பண முதலீடு 2016 டிசம்பருக்கு பின் வெகுவேகமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே பாஜக கட்சியில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. பாஜகவை சேர்ந்த பியூஸ் கோயல், அடுத்த வருட தேர்தலுக்குள் கருப்பு பணம் மொத்தமும் கொண்டு வரப்படும். மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.

இந்தநிலையில் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. சிலர் நேர்மையான வழியில் சேர்த்த பணத்தையும் அங்கு சேர்த்து வைத்து இருக்கிறார்கள். சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.

சுவிஸில் டெபாசிட் செய்தவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான் இப்படி பணம் போட்டு இருக்கிறார்கள். உள்நாட்டு இந்தியர்கள் பெரிய அளவில் டெபாசிட் செய்யவில்லை.

English summary
In a Facebook post Arun Jaitley writes 'Switzerland has taken significant efforts to get out of image of being a tax haven & a non-compliant state. It is on verge of making disclosures in real time & therefore, is no longer an ideal destination for tax evaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X