For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தான்.. சாலையில் கிடந்த வாக்குச் சாவடி எந்திரம்..காங்கிரஸ் வெற்றியை தடுக்க சதி?

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜஸ்தானில் சாலையில் கிடந்த வாக்குச் சாவடி எந்திரம்-வீடியோ

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சாலையில் வாக்குச் சாவடி எந்திரம் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில் நேற்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இங்கு மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ஆனால் ஒரு தொகுதியின் வேட்பாளர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

    இதையடுத்து 72.62 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்து வாக்குகளும் 11-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக மின்னணு வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

    பரபரப்பு

    இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிசாகஞ்ச் தொகுதிக்குள்பட்ட சஹாபாத் என்ற இடத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கேட்பாரற்று சாலையில் கிடந்தது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சஸ்பெண்ட்

    சஸ்பெண்ட்

    தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வாக்குப் பதிவு எந்திரத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக இரு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

    கணிப்புகள்

    கணிப்புகள்

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் ராஜஸ்தானில் வசுந்த்ரா ராஜே சார்ந்த பாஜக வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என்றும் காங்கிரஸ் தலை தூக்க போகிறது என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.

    வெற்றி

    வெற்றி

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை சீர்குலைக்க வேறு எந்த கட்சியாவது சதி செய்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பிட்ட, அதாவது காங்கிரஸ் செல்வாக்கு உள்ள தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களை இது போல் வீசுவதன் மூலம் அதன் வெற்றி தடுக்கப்படலாம் என யாராவது நினைத்திருக்கலாம். யாருக்கும் தெரியும்.

    English summary
    Electronic Voter Machine missed in Rajasthan and finally it was found in streets. EC suspends 2 staffs regarding this.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X