For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயசு 70 ஆகிறது.. காலேஜ் பெண்ணிடம் வேலையை காட்டிய பாஜக மாஜி எம்எல்ஏ.. வச்சு செய்த இளைஞர்கள்.. வீடியோ!

வாரணாசி மாஜி எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கான்பூர்: 70 வயசு பாஜக மாஜி எம்எல்ஏ ஒருவர், மாணவியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு தந்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து மாஜி எம்எல்ஏ என்றும் பாராமல், அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி, செளபேபூரில் பலுவா பஹாடியா மர்க் என்ற பகுதி அமைந்துள்ளது.. இங்கு ஒரு தனியார் காலேஜ் இயங்கி வருகிறது.. அதன் முதல்வராக இருப்பவர் மாயா ஷங்கர் பதக்... இவர் வாரணாசி தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஆவார்.. 2 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.

 Ex BJP MLA thrashed by youths in viral video for alleged molestation

ஷங்கருக்கு 70 வயதாகிறது.. தன்னுடைய காலேஜில் படிக்கும் ஒரு மாணவிக்குதான் இவர் பாலியல் டார்ச்சர் தந்ததாக சொல்லப்படுகிறது.. ஆபாசமாவும் இந்த ஷங்கர் அந்த பெண்ணிடம் பேசினாராம்.. அதனால், அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் சொல்லி உள்ளார்.

உடனே குடும்பத்தினரும் இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் அந்த காலேஜுக்கு வந்து நியாயம் கேட்டுள்ளனர்.. இவர்களுடன் வேறு சில நபர்களும் காலேஜுக்கு வந்துள்ளனர்..

மாஜி எம்எல்ஏ ஷங்கரிடம் விசாரித்துள்ளனர்... அதற்கு அவர், குடியரசு தின விழா பேச்சுப்போட்டி ரிகர்சல் நடந்து வருகிறது.. அந்த ரிகர்சலில், இந்த மாணவி சரியாக பேசவில்லை, அதனால் திட்டினேன் என்று காரணம் சொல்லி உள்ளார். எனினும் இந்த காரணத்தை ஏற்காத குடும்பத்தினர், ஷங்கரை தாக்க முற்பட்டுள்ளனர்... இறுதியில் ஷங்கர் கையெடுத்து கும்பிட்டும், தன்னுடைய காதை பிடித்தும், அந்த பெண் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. இந்த வீடியோ வைரலானதும் செளபேபூர் போலீசார் ஷங்கரை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்... ஆனால் ஷங்கர் தரப்பு இது சம்பந்தமாக எந்த கேஸையும் தர விரும்பவில்லை என்று சொல்லி விட்டாராம்.. அதேபோல, மாணவியின் குடும்பத்தினரும், அவர் மீது போலீசில் புகார் தர மறுத்திருக்கிறார்களாம்.

English summary
Ex BJP MLA thrashed by youths in viral video for alleged molestation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X