For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, மோடியிடம் பரிசு வாங்கிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியிடம் பரிசு வாங்கிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை-வீடியோ

    டெல்லி: சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் ஹரியானாவில் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிக்கும் 19 வயது மாணவிக்குதான் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

    Ex-CBSE Top student gang-raped in Haryana

    இந்த மாணவி பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர்.

    நேற்று சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று இளைஞர்கள், அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத வயல் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அந்த வயலில் மேலும் சிலரும் வந்து இணைந்துள்ளனர். அவர்களும் அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வேதனையால்,மாணவி சுய நினைவை இழந்தார்.

    இதையடுத்து காமுகர்கள் அந்த மாணவியை, அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில் கொண்டு சென்று தள்ளி விட்டு சென்றுள்ளனர். உடலில் வலிமையை வரவழைத்த அந்த மாணவி, போலீசில் தந்தை மூலமாக புகார் அளித்தார். தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, மாணவியின் தந்தையிடம் புகாரை வாங்காமல் போலீஸ் அலைக்கழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட வேண்டாம் என ஊடகங்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. "சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்ற எனது மகளுக்கே இந்த நிலை. மோடி, பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்று பிரச்சாரம் செய்கிறார். ஆனால், சிபிஎஸ்இயில் முதல் மதிப்பெண் பெற்ற எனது மகளுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று கதறுகிறார் அந்த மாணவியின் தாய்.

    English summary
    A 19-year-old college student who was rewarded by the President after she topped the CBSE board exam was allegedly kidnapped and gang-raped by a group of men in Haryana on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X