For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'நாசா' விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்ற கனுபாய் ராம்தாஸ் காந்தி !

அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் ராம்தாஸ் காந்தி

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியின் மூன்றாவது மகனாவார் ராம்தாஸ் தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர், தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு தனியே வாழ்ந்தவர். இவரது மனைவி நிர்மலா.

இந்த தம்பதியின் மகன் கனு ராம்தாஸ் காந்தி. இவருக்கு பாஸ்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி டாக்டர் பட்டம் பெற்ற ஷிவலட்சுமியுடன் திருமணம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் இவர்கள் திருமணம் நடந்தது.

ex-NASA scientist Kanu Ramdas Gandhi

இவர் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கனுபாய் காந்தி. அதன்பின்னர், அமெரிக்காவில் சிறிது காலம் வசித்து விட்டு 2014ம் ஆண்டில் தனது மனைவியுடன் இந்தியா திரும்பினார். அவர்களுக்கு உறவினர்கள் அடைக்கலம் அளிக்காததால் முதியோர் இல்லம் மற்றும் ஆசிரமங்களில் வசித்து வந்தனர். சுதந்திர போராட்டத்தின் போது, காந்தி உப்பு சத்தியாகிரக யாத்திரை சென்ற போது சிறுவனாக இருந்த கனு காந்திக்கு இப்போது வயது 87.

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகருக்கு வந்த கனு காந்திக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள ராதாகிருஷ்ணா ஆலயத்தால் நடத்தப்படும் ஷிவ்ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இவரது மனைவிக்கு ஷிவலட்சுமிக்கு தற்போது 90 வயதாகிறது. காது கேளாமை மற்றும் முதுமை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mahatma Gandhi's grandson Kanu Ramdas Gandhi is a ex-NASA scientist
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X