For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமை நீதிபதியாக தத்துவை நியமிக்க எதிர்ப்பு- 'ரா' பெண் அதிகாரியின் வழக்கு விசாரணைக்கு ஏற்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Ex-RAW officer moves HC against Justice Dattu as next CJI
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஹெச்.எல். தத்துவை நியமிகக் எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் வெளியுறவு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'வின் முன்னாள் பெண் அதிகாரியும் வழக்கறிஞருமான நிஷா பிரியா பாட்டியா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிஷா பிரியா பாட்டியா நேற்று ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார். அதில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான ஹெச்.எல். தத்துவை உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமித்த அரசு பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோகினி மற்றும் நீதிபதி என்லா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று வாதிட்டார்.

ஆனால் அதை நிராகரித்த நீதிபதிகள் இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

English summary
An advocate and a former RAW woman officer Tuesday moved the Delhi High Court against the appointment of Justice H.L. Dattu as the next Chief Justice of India (CJI) alleging sexual harassment by him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X