For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் ராணுவத்தினர் விருதுகளை திருப்பி கொடுப்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது:மனோகர் பாரிக்கர்

By Karthikeyan
Google Oneindia Tamil News

அரக்கோணம்: முன்னாள் ராணுவத்தினர் விருதுகளை திருப்பி கொடுப்பது என்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமேச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவ வீரர்கள் ஒரே பதவி, ஒரே ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய அரசு கடந்த வாரம் இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக்கொடுக்க போவதாக முன்னாள் ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

ex servicemen to burn medals as an insult to the nation

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விருதினை நான் கொடுக்க வில்லை. விருதுகளை திருப்பி கொடுப்பது என்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது. முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டாம். ஒய்வூதியத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒய்வூதியத்திலும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளோம் பிரச்சினைகள் இருந்தால் குழு அமைக்கப்படும். அக்குழுவிடம் மனு கொடுக்கலாம்.

இந்திய இராணுவத்தை பலப்படுத்த பலமான திட்டம் உள்ளது. பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தலவாளப்பொருட்களை பயன்படுத்த உள்ளோம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தலவாளப்பொருட்களை நவீனப்படுத்த திட்டம் உள்ளது.

பெண்கள் இராணுவத்தில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு போர் பயிற்சிப் பெற ஆட்களை தேர்வு செய்ய சில பிரச்சினைகள் உள்ளது. கப்பல் படையில் பெண்களை சேர்த்தோம் இதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் 71-வது பயிற்சியின் போது 5-பெண்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

English summary
ex servicemen to Burning and returning them is an insult to the nation and the defence forces," Parrikar said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X