For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நவ.24 நள்ளிரவு வரை 'இங்கெல்லாம்' செல்லுபடியாகும்: அரசு அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் வரும் 24ம் தேதிவரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லுபடியாகாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். அதே நேரம், கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், டோல் பூத்துகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14ம் தேதி) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

Exemption on old notes for certain categories extended till November 24

ஆனால், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இந்த காலக்கெடு இம்மாதம் 24ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று டெல்லியில் அறிவித்தார்.

மூத்த அமைச்சர்களுடன் மோடி நேற்றிரவு நடத்திய அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எனவே, 24ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை பழைய நோட்டுக்கள் மேற்சொன்னபடி, அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், டோல் கேட்டுகளில் செல்லுபடியாகும்.

English summary
Old Rs 500 and 1,000 notes to be accepted at government hospitals, petrol pumps and toll booths till November 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X