For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துருக்கியில் மிக கவனமாக இருங்கள்.. இந்தியர்களுக்கு மத்திய அரசு வார்னிங்.. பூதாகரமாகும் பிரச்சனை!

துருக்கி செல்லும் இந்தியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Government issues advisory to Indian tourists visiting Turkey

    டெல்லி: துருக்கி செல்லும் இந்தியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் எதையும் சமாளிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த இரண்டு நாட்களாக பிரமோஸ் ஏவுகணையை சோதனை செய்து உலகிற்கு தன்னுடைய பலத்தை காட்டியது.

    அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்று வல்லரசு நாடுகளுடன் நெருக்கம் காட்டியது என்று இந்தியா வரிசையாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது காஷ்மீர் பிரச்சனைக்காக மலேசியா, துருக்கி போன்ற நாடுகளை பகைக்கவும் இந்தியா தயாராகிவிட்டது.

    ப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்!ப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்!

    ஐநா வாதம்

    ஐநா வாதம்

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஐநாவில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் இந்தியாவிற்கு எதிராக மலேசியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகள் பேசியது. துருக்கி மிக முக்கியமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக மிக முக்கிய வாதங்களை வைத்து பேசி இருந்தது.

    துருக்கி சண்டை

    துருக்கி சண்டை

    அப்போதே இந்தியா துருக்கி இடையிலான உறவில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. துருக்கி மீது அமெரிக்கா கொஞ்சம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் இந்தியாவும் துருக்கியை பெரிய நாடாக மதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உறவு விரிசல்

    உறவு விரிசல்

    இந்த நிலையில் கடந்த வாரம் சர்வதேச அமைப்பான எஃப்ஏடிஎஃப் (பினான்சியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் - Financial Action Task Force - FATF) அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தீவிரவாத குற்றங்கள், தீவிரவாதம் தொடர்பான பொருளாதார குற்றங்கள், பண மோசடிகள் குறித்து விசாரிக்கும் அமைப்பாகும். தீவிரவாதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது என்பதை இந்த அமைப்பு தீவிரமாக கண்காணிக்கும்.

    தீவிரவாதம்

    தீவிரவாதம்

    இதில் பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதம் எப்படி உள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் வாக்களித்தது.

    பிளாக் லிஸ்ட்

    பிளாக் லிஸ்ட்

    பாகிஸ்தானுக்கு பிளாக் லிஸ்ட் கொடுக்க கூடாது. அந்த நாட்டை தடை செய்ய கூடாது என்று மூன்று நாடுகளும் வாக்களித்தது. இதனால் பாகிஸ்தான் எஃப்ஏடிஎஃப் நடவடிக்கையில் இருந்து தப்பித்தது. இதில் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்து இந்தியாவை மேலும் சீண்டியது.

    பாதுகாப்பு இல்லை

    பாதுகாப்பு இல்லை

    இதையடுத்து தற்போது துருக்கிக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. துருக்கியின் பாதுகாப்பு துறை நிறுவனமான அனடோலு ஷிப் யார்டு நிறுவனத்துடன் ஏற்கனவே இந்தியா உறவை முறித்துக் கொண்டது. அந்த நிறுவனம் இந்தியாவுடன் செய்திருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.

    உறவு முறிந்தது

    உறவு முறிந்தது

    இன்னும் சில துருக்கி நிறுவனங்களுடன் மொத்தமாக இந்தியா உறவை முறிக்க உள்ளது என்றும் கூறுகிறார்கள். அதேபோல் சிரியா போர் குறித்தும் இந்தியா வெளிப்படையாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளது. சிரியா மீது துருக்கி தாக்குதல் நடத்துவது தவறு, அங்கு உள்ள குர்து படைகளை துருக்கி தாக்குவது தவறு என்று இந்தியா கருத்து தெரிவித்தது.

    என்ன திருப்பம்

    என்ன திருப்பம்

    இந்த நிலையில்தான் தற்போது புதிய திருப்பமாக துருக்கி செல்லும் இந்தியர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். அங்கு மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி உள்ளது. துருக்கியில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

    English summary
    Exercise utmost caution: Government issues advisory to Indian tourists visiting Turkey.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X