For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி.. ரிபப்ளிக் - ஜன் கி பாத் கணிப்பு!

ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாக ரிபப்ளிக் - ஜன் கி பாத் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்து கணிப்பில் தகவல்

    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுவதால் தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாக ரிபப்ளிக் - ஜன் கி பாத் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு வழியாக அரசியல் மாரத்தான் என்று அழைக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்கள் தற்போது முடிந்துள்ளது. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.

    Exit Poll 2018: Congress and BJP likely to see a tough fight in Rajasthan says Republic - Jan Ki Baat

    இன்றுதான் ராஜஸ்தான், தெலுங்கானா மாநில தேர்தல்கள் முடிந்தது. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. ரிபப்ளிக் - ஜன் கி பாத் இணைந்து நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ளது.

    அதில் ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதனால் அங்கு தொங்கு சட்டசபை உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

    பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகள் தேவை. இதில் பாஜக 83-103 தொகுதிகளை வெல்லும். காங்கிரஸ் 81-101 தொகுதிகளை வெல்லும். பிற கட்சிகள் 15 தொகுதிகளை வெல்ல கூடும் என்று ரிபப்ளிக் - ஜன் கி பாத் எக்சிட் போலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Exit Poll 2018: Congress and BJP likely to see a tough and crucial fight in Rajasthan state says Republic - Jan Ki Baat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X