For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குல்பூஷன் ஜாதவ் குடும்பத்திற்கு நிம்மதி கிடைத்துள்ளது.. சுஷ்மா ஸ்வராஜ் ஹேப்பி

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடுவதற்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது, அவரதுகுடும்பத்திற்கு பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியர் குல்பூஷன் ஜாதவின் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கும் வகையில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் சர்வதேச நீதிமன்றத்தில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

Sushma

அதன்பின்னர் கடந்த 15ஆம் தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய

உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் விடுத்தது.பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்று குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குல்பூஷன் யாதவ் மரணதண்டனையில் பாகிஸ்தான் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியது.

2008ம் ஆண்டு சட்டவிதிகள்படி பாகிஸ்தான் ஆதராங்கள் போதுமானதாக இல்லை என்று பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், குல்பூஷன் ஜாதவ் தூக்கு தண்டனையை ஆகஸ்ட் மாதம் வரை தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இறுதி தீர்ப்பு வழங்கும் வரை பாகிஸ்தான் குல்பூஷண் ஜாதவை தூக்கிலிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குல்பூஷண் யாதவ் மரணதண்டனை வழக்கில் சர்வேதேச நீதிமன்றத்தில் இந்தியாவிற்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் குல்பூஷன் ஜாதவ் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாதத்தை சரியான முறையில் எடுத்து வைத்த ஹரிஷ் சால்வேவிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
External affairs minister Sushma swaraj tweeted that the judgement by ICJ is a big relief to Jadhav's family and people of india
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X