For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி முகத்தை காட்டினால் போதும்.. விமானத்தில் பயணிக்கலாம்.. பெங்களூர் ஏர்போர்ட்டில் புது டெக்னலாஜி!

பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் ஏர்போட்டில் ஆவணங்களை காட்டி விமானத்தில் பயணிப்பதற்கு பதிலாக முகத்தை மட்டுமே காட்டிவிட்டு பயணிக்கும் வகையில் தொழில்நுட்ப வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) எனப்படும் தொழில்நுட்பம் தற்போது பல ஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது. நம்முடைய முகத்தை ஸ்கிரீன் முன் காட்டினால் அதுவே நம்மை அடையாளம் கண்டுபிடித்து, லைக்கை திறந்துவிடும். இதை தான் பெங்களூர் விமான நிலையத்தில் கொண்டு வர இருக்கிறார்கள்.

இன்னும் சில மாதங்களில் இந்த வசதி பெங்களூரில் வர உள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

என்ன செய்ய போகிறார்கள்

என்ன செய்ய போகிறார்கள்

இதன்படி, பெங்களுர் விமான நிலையத்தில் சில விமான சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகளுக்கு ஆவண சோதனைகளை மொத்தமாக நிறுத்த போகிறார்கள். அதற்கு பதிலாக முகத்தை ஆராயும் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) கருவிகளை வைக்க போகிறார்கள். நம்முடைய ஆதார் தகவல் மூலம் இதை வைத்து நம்மை அடையலாம் காண்பார்கள்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதன் மூலம் பணிகள் மிகவும் வேகமாக நடக்கும். எந்த கவுண்டரிலும் நீங்கள் நிற்க வேண்டியது இல்லை. அதேபோல் ஒரு நொடியில் நீங்கள் யார், உங்கள் பின்புலம் என்னவென்று அதிகாரிகளுக்கு தெரியும். இதனால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்படும்.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

நாம் இதில் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) சாதனம் முன் போய் நின்றால் அதுவே நம் ஆதார் விவரங்களை வைத்து சோதனைகளை முடித்துவிடும். ஆதாருடன் பாஸ்போர்ட்டை இணைத்து இருக்கும் பட்சத்தில் அந்த சோதனையையும் முடித்துவிடும். டிக்கெட்டை மட்டும் காட்டிவிட்டு விமானத்தில் பயணிக்கலாம்.

ஆசியாவிலேயே பெரிது

ஆசியாவிலேயே பெரிது

ஆசியாவிலேயே இந்த முறை எங்குமே கிடையாது. முதல்முறையாக பெங்களூரில்தான் கொண்டு வரப்பட உள்ளது. அப்படி கொண்டுவரப்படும் பட்சத்தில் உலகிலேயே அதிக மக்கள் செல்லும் விமான நிலையத்தில் பேஸ் ரெக்கக்னிஷேஷன் (face recognition) பயன்படுத்தப்படும் விமான நிலையம் என்று பெயரை பெங்களூர் விமான நிலையம் பெறும்.

English summary
Face Recognition method to be introduced in Bengaluru airport for speed process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X