For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலை வாங்கித் தருவதாக மோசடி... ராஜஸ்தானில் போலி சிபிஐ அதிகாரி கைது

Google Oneindia Tamil News

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலி சிபிஐ அதிகாரியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் பல இளைஞர்களிடம் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடி செய்துள்ளதாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் அருண் பன்சாலி. ஜோத்பூரைச் சேர்ந்தவர். இவர் பல இளைஞர்களிடம் தான் சிபிஐயில் வேலை பார்ப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பணம் பறித்துள்ளார்.

Fake CBI officer arrested

மிகப் பெரிய அளவில் மோசடி செய்துள்ள இவரை தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் இவரைக் கைது செய்தனர். இவரது வீட்டில் ரெய்டு நடத்தியபோது போலி சிபிஐ அடையாள அட்டை, லெட்டர் பேட், போலி வேலைவாய்ப்பு நியமன உத்தரகவுகள் உள்ளிட்டவை சிக்கின.

அவர் மீது பல பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலீஸார் அருண் பன்சாலியை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். ஜூன் 27ம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் அனுமதித்து கோர்ட் உத்தரவிட்டது.

English summary
The Central Bureau of Investigation (CBI) on Wednesday arrested a person who was impersonating as a CBI officer from Jodhpur and cheating many youths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X