For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை செய்தால் சாகமாட்டோம்... கடவுள் காப்பாற்றுவார்... மூடநம்பிக்கையால் பலியான 11 பேர்

தற்கொலை செய்து கொண்டால் சாகமாட்டோம் என்றும் கடவுள் காப்பாற்றுவார் என்றும் மூடநம்பிக்கையால் 11 பேர் பலியாகிவிட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    11 பேர் தற்கொலை வழக்கில் தொடர்புடைய சாமியாருக்கு போலீஸ் வலை வீச்சு- வீடியோ

    டெல்லி: டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டால் சாகமாட்டோம் என்றும் கடவுள் காப்பாற்றுவார் என்றும் மூடநம்பிக்கையால் 11 பேர் பலியாகிவிட்டனர்.

    டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததால் இது கொலையா இல்லை தற்கொலையா என போலீஸார் குழம்பினர்.

    தற்கொலை மரணம்

    தற்கொலை மரணம்

    இதையடுத்து வீட்டை சோதனை செய்ததில் அவர்களது பணம், நகை என எந்த வித பொருட்களும் கொள்ளை போகவில்லை. வீட்டில் எந்த இடத்திலும் வெளியாட்களின் கைரேகைகள் கிடைக்கவில்லை. இதனால் போலீஸார் இந்த மரணங்களை தற்கொலை மரணம் என்ற முடிவுக்கு வந்தனர்.

    இறைவனை காண...

    இறைவனை காண...

    இதையடுத்து வீடு முழுவதும் தேடியதில் இரு மர்ம டைரிகள் சிக்கின. அதில் சில குறிப்புகள் இருந்தன. எப்படி தற்கொலை செய்வது, தற்கொலை செய்து கொண்டால் இறைவனை காண முடியும் என்றெல்லாம் நம்பியுள்ளனர்.

    செத்துவிடுவோம்

    செத்துவிடுவோம்

    இதற்கேற்றாற்போல் டைரியில் சில குறிப்புகள் இருந்தன. அதில் சாவதற்கு முன்பு கை, வாய் கட்டி கொள்வது, கண்களை கட்டி கொள்வது ஆகியன இருந்தன. இந்நிலையில் இந்த குடும்பத்தினர் தற்கொலை செய்தால் செத்துவிடுவோம் என்று நம்பவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.

    மூடநம்பிக்கை

    மூடநம்பிக்கை

    தற்கொலை செய்தால் நம்மை கடவுள் காப்பாற்றுவார் என்று இவர்கள் நம்பியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. கடவுளை பார்ப்பதற்காக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இரு பெரிய நோட்டு புத்தகங்களில் குறிப்புகள் எழுதியிருந்தனர்.

    English summary
    Family members of Burari house didnt believe they would die and also god would save them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X