For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செக்ஸ் புகாரில் சிக்கி ஜீரோவான ஹீரோக்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹீரோக்களாக கொண்டாடப்பட்ட அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், கடவுளாக வணங்கப்பட்ட சாமியார்கள் பலரும் செக்ஸ் புகாரில் சிக்கி சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர்.

பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என்ற புகாரில் சிக்கியதால் கதாநாயகர்களாக போற்றப்பட்ட பலரின் முகமும் கறைபடிந்துதான் போகும். பிரபலமானவர்களைப் பற்றிய செக்ஸ் சர்ச்சை செய்திகள் என்றாலே ஊடகங்களில் பரபரப்பான செய்தியாக வெளியாகும்.

செக்ஸ் புகாரில் சிக்கியவர்களில் பலரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்றிருக்கின்றனர். சிலரது அரசியல் வாழ்வே அஸ்தமித்து போயுள்ளது. சிலரோ அந்த புகாரை அடித்து நொறுக்கி மீண்டு வந்திருக்கின்றனர்.

செக்ஸ் புகாரில் சிக்கி ஜீரோவான ஹீரோக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

தருண் தேஜ்பால்

தருண் தேஜ்பால்

புலனாய்வு செய்திகளுக்குப் புகழ்பெற்ற தெஹல்கா இதழை, அதன் அடித்தளத்தில் இருந்து எழுப்பியவர் தருண் தேஜ்பால். நாட்டை காக்க வேண்டிய ராணுவத் துறையில் எப்படியெல்லாம் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதை ரகசிய கேமரா வாயிலாக இவர் தோலுரித்துக் காட்டியவர். கிரிக்கெட் சூதாட்டம் தொடங்கி, 2ஜி தில்லுமுல்லுகள் வரை பல பண‌ முதலைகளையும் பொறிவைத்துப் பிடித்தவர். ஆசியாவின் நம்பிக்கை தரும் 50 மாமனிதர்களில் ஒருவர் என்று உலகம் இவரைக் கொண்டாடியது.

ஆனால் இன்றோ, பொதுவாழ்கையில் ஈடுபடுகிறவர்கள் எத்தகைய தனிமனித நெறிகளோடும் ஒழுக்கத்தோடும் செயல்பட வேண்டும் என்பதை தன்வாழ்நாள் முழுதும் பிரசாரம் செய்துவந்த இவரே, தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு இளம்பெண்ணை பாலியல் சில்மிஷம் செய்த குற்றத்துக்காக கைதாக இருக்கிறார்.

பில் கிளிண்டன்

பில் கிளிண்டன்

அமெரிக்க அதிபராக பதவி வகித்த பில் கிளிண்டன் மீது 1994-ம் ஆண்டு. பவுலா ஜோன்ஸ் என்பவர் செக்ஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேசமயம் 1998-ம் ஆண்டுகளில் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி செக்ஸ் விவகாரம் அமெரிக்க அரசியலை பரபரப்புக்குள்ளாக்கியது. முதலில் மறுத்த கிளின்டன் . மரபணு சோதனையில் குட்டு வெளியானதால் விஷயம் பெரிதானது. இதைத்தொடர்ந்து உண்மையினை ஒப்புக்கொண்டார்.

டோமினிக் ஸ்டாரஸ் கான்

டோமினிக் ஸ்டாரஸ் கான்

செக்ஸ் புகாரின் பேரில்ஐ.எம்.எப் (இண்டர்நேஷனல் மானிட்டரி பண்ட்) தலைவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் மன்ஹாட்டன் நகரில் சோபிடல் என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது 32 வயது பணிப்பெண் ஒருவரை கற்பழிக்க முயன்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும்.

மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்சன்

பாப் இசை உலகில் மன்னராக திகழ்ந்தவர் மைக்கேல் ஜாக்சன். தனது நடன அசைவுகளாலும், அசாத்திய குரல் வளமையாலும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை உலகெங்கிலும் கொண்டவர். அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. மைக்கேல் ஜாக்சன் கடந்த 1989ம் ஆண்டில் இருந்து பல்வேறு சிறுவர்களுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாக சில தகவல்களை வெளியிட்டது. ஜாக்சனால் 17 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் 5 குழந்தை நடிகர்கள் மற்றும் 2 நடன கலைஞர்களும் உள்ளனர். இது போன்ற தகவல்கள் வெளிவராமல் இருப்பதற்காக 35 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையினை (ரூ.200 கோடிக்கு மேல் ) ஜாக்சன் செலவு செய்து உள்ளதாகவும் எப்.பி.ஐ. சேகரித்து உள்ள தகவலில் கூறப்பட்டு உள்ளது.

என்.டி.திவாரி செக்ஸ் புகார்

என்.டி.திவாரி செக்ஸ் புகார்

என்.டி.திவாரி ஆந்திர மாநில கவர்னராக பதவி வகித்தபோது அவர்மீது செக்ஸ் புகார் எழுந்தது. வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட இளம்பெண்களுடன் கவர்னர் மாளிகையில் அவர் உல்லாசமாக இருந்தார் ஆந்திர ஜோதி பத்திரிகைக்கு சொந்தமான "ஏ.பி.என். ஆந்திர ஜோதி" என்ற தெலுங்கு டி.வி. சேனல், இதுதொடர்பான அதிர்ச்சி தகவல்களை கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்டு அவரது கவர்னர் பதவிக்கு வேட்டு வைத்தது. இவர் ஏற்கனவே ஆந்திரா மாநில முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

மகிபால் மடெர்னா- மால்கன்சிங்

மகிபால் மடெர்னா- மால்கன்சிங்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நர்சாக பணியாற்றி வந்த பன்வாரி தேவி கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி காணாமல் போனார். இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்பு காரணமாக அவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. மாஜி அமைச்சர் மகிபால் மடெர்னா, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏ மால்கன்சிங்குக்கும் பன்வாரி மாயமான விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார்.

அசராம் பாபு

அசராம் பாபு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக சாமியார் அசராம் பாபு மீது புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தை அளித்த புகாரை தொடர்ந்து சாமியார் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ்

கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், செக்ஸ் புகாரில் சிக்கியால் குடும்ப வாழ்வில் சூறாவளி வீசியது. ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் வெளிப்படையாக தெரிவித்தார். மிஸிஸிபியில் உள்ள செக்ஸ் சிகிச்சை மையத்தில் வைத்து தனது மனைவியிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தாராம் உட்ஸ்.

எஸ்.பி.எஸ் ரத்தோர்

எஸ்.பி.எஸ் ரத்தோர்

அரியானா மாநில முன்னாள் டி.ஜி.பி., எஸ்.பி.எஸ்.ரத்தோர். இவர், 1990ம் ஆண்டு, டென்னிஸ் வீராங்கனை ருச்சிகா கிர்கோத்ரா,14, என்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர். இவருக்கு, 2009ம் ஆண்டு சி.பி.ஐ., கோர்ட், ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஆனந்த் ஜான் அலெக்சாண்டர்

ஆனந்த் ஜான் அலெக்சாண்டர்

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் ஆனந்த் ஜான் அலெக்சாண்டர் (வயது 35). அமெரிக்க வாழ் இந்தியரான இவர் புகழ் பெற்ற பேஷன் டிசைனராக திகழ்ந்தார். கடந்த 2003-ம்ஆண்டில் அமெரிக்க டி.வி. நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமெரிக்காவின் அடுத்த மிகப்பெரிய மாடல் என்ற பட்டத்தை பெற்றார். 2004-ம் ஆண்டில் நியூஸ் வீக் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று உலகில் வெற்றி பெற்ற தெற்காசியர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றவர். இவர் 14 இளம் மாடல் அழகிகள் மற்றும் இளம் பெண்களை கற்பழித்தாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கடந்த 2007-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். புகார் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 59 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

English summary
With noted journalist Tarun Tejpal being accused of sexual assault, we look at well-known personalities whose names have cropped up in sex controversies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X