For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுதந்திர தினம்... பிரதமர் மோடி அணிந்த தலைப்பாகை... ரகசியம் உடைந்தது!!

Google Oneindia Tamil News

டாபி: ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடியின் பேச்சு எதை மையமாக வைத்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் இருக்கும். அதேபோல், அவர் தலையில் அணிந்து இருக்கும் தலைப்பாகையும் மக்களின் கவனத்தை ஈர்க்கும். எந்த நிறத்தில் இருக்கும், எந்த மாதிரியான செய்தியை மக்களுக்கு அனுப்புகிறது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கும்.

Recommended Video

    Modi- ன் சுதந்திர தின உரை.. திடீரென இற்ங்கி வரும் China

    நடப்பாண்டில் அவர் அணிந்து இருந்த தலைப்பாகை ஆரஞ்ச் மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தது. இந்த தலைப்பாகையை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அனுப்பி வைத்து இருக்கும் செய்தி தற்போது வெளியாகி உள்ளது.

    farmer from Gujarat have turban to PM Modi Turban on Independence day

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி சுஜன்சிங் பார்மர். வயது 38. இதுகுறித்து அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் சிஆர் பாட்டில் அளித்திருக்கும் பேட்டியில், ''சுதந்திர தினத்தன்று தான் கொடுக்கும் தலைப்பாகையை பிரதமர் அணிய வேண்டும் என்பது சுஜன்சிங்கின் விருப்பம். சுஜன்சிங்கிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆறு தலைப்பாகைகள் பிரதமருக்கு தயாரிக்க இருப்பதாகவும், அவற்றை பிரதமருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டு இருந்தார். இதன்படி ஆகஸ்ட் 10 ஆம் தேதி டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகத்துக்கு ஆறு தலைப்பாகை அனுப்பி வைக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுகன்சிங் கூறுகையில், ''குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது, பிரதமர் மோடியை சந்தித்து இருக்கிறேன். டாபி மாவட்டத்தில் இருக்கும் சொங்கத் தாலுகாவுக்கு வந்தபோது சந்தித்தேன். அப்போது அவருக்கு தலைப்பாகை கொடுத்தேன். ஆனால், அதை அப்போது அவர் அணியவில்லை. ஆனால், இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி. நான் கொடுத்திருந்த தலைப்பாகையை சுதந்திர தினத்தன்று அணிந்து இருந்தார். இதேபோல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கும் தலைப்பாகை கொடுத்து இருக்கிறேன். அவர்களும் அதை அணிந்து இருக்கிறார்கள்'' என்றார்.

    கொரோனவால் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு- ஐ.எல்.ஓ.- ஆசிய வளர்ச்சி வங்கி கொரோனவால் இந்தியாவில் 41 லட்சம் இளைஞர்கள் வேலை இழப்பு- ஐ.எல்.ஓ.- ஆசிய வளர்ச்சி வங்கி

    விவசாயியாக இருந்தாலும், கடந்த 16 ஆண்டுகளாக ராஜ்புட் சமுதாயத்திற்காக சுஜன்சிங் தலைப்பாகை தயாரித்து வருகிறார். 18 விநாடியில் ஒரு தலைப்பாகை தயாரித்து விடுவாராம். விவசாயி என்ற வகையில் அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரது தலைப்பாகையை பிரதமர் இந்த முறை அணிந்து இருக்கிறார்.

    English summary
    farmer from Gujarat have turban to PM Modi Turban on Independence day
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X