For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விவசாயிகள் தற்கொலை.. இணைந்து தீர்வு காண்போம்: லோக்சபாவில் பிரதமர் மோடி

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் தற்கொலை பிரச்சனைக்கு தீர்வு காண அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் ராஜஸ்தானை சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக இன்று லோக்சபாவில் உறுப்பினர்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

Farmers' problems old, need to find solutions collectively, says PM Modi

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள உறுப்பினர்களும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

மனித உயிரை விட எதுவும் பெரிதல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்சினை இதற்கு தீர்வு காண அரசு முயன்று வருகிறது. உங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் ஏற்க அரசு தயாராக உள்ளது. நாட்டின் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நாங்கள் விவசாயிகளை உயிரிழக்க விடாமாட்டோம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

English summary
Sharing "pain" over the suicide by a farmer here, Prime Minister Narendra Modi today said the agriculture community's problems are "old, deep-rooted and widespread" which need to be addressed collectively and expressed willingness to accept any suggestion with an open mind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X