For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய கீதத்தின் போது செல்போனில் பேச்சு... சர்ச்சையில் சிக்கிய பரூக் அப்துல்லா

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பதவியேற்வு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசிய கீதம் இசைக்கப்படும் போது செல்போனில் பேசுவது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கும் பரூக் அப்துல்லா, செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினர் அவரது இந்த நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

English summary
National Conference chief Farooq Abdullah was on Friday caught on camera talking on phone during the national anthem at Trinamool Congress chief Mamata Banerjee's swearing-in ceremony as the West Bengal Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X