For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பண்டிட்கள் இல்லாமல் காஷ்மீர் ஒருபோதும் முழுமையடையாது.. பாரூக் அப்துல்லா வைத்த அதிரடி கோரிக்கை

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: 1990 களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்முவை தளமாகக் கொண்ட எபிலோக் நியூஸ் நெட்வொர்க் நடத்திய ஒரு ஆன்லைன் கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதிலளித்த பாரூக் அப்துல்லா, காஷ்மீர் பண்டிதர்கள் இல்லாமல் காஷ்மீர் முழுமையடையாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும், அவர்களை கௌரவமாக திரும்பக் கொண்டுவருவதற்கான எந்தவொரு வழிமுறையையும் ஆதரிப்பதாகவும் கூறினார்.

1990களின் முற்பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போர்மேகம் சூழத் தொடங்கிய பின்னர் கிட்டத்தட்ட 60,000 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் அந்த மண்ணை விட்டு வெளியேறி பிற பகுதிகளில் வசிக்க தொடங்கினர். அவர்கள் காஷ்மீரை விட்டு குடியேறியவர்களாக பதிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களே.. 8ம் தேதி முதல் இந்தியா வர.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!வெளிநாட்டு வாழ் இந்தியர்களே.. 8ம் தேதி முதல் இந்தியா வர.. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!

பண்டிதர்கள் வெளியேற்றம்

பண்டிதர்கள் வெளியேற்றம்

லோக்சாப உறுப்பினரும், தேசிய மாநாட்டின் தலைவருமான பாரூடக அப்துல்லா, அன்றைய முன்னாள் ஆளுநர் ஜக்மோகன் மீது பண்டிட் குடும்பங்கள் வெளியேறிய விவகாரத்தில் குற்றம் சாட்டினார். மூன்று மாதங்களுக்குள் அவர்கள் திரும்புவதை உறுதி செய்யப்படும் என்ற தவறான வாக்குறுதியின் பேரில் அவர்களை அப்போது அழைத்துச் சென்றதாகவும் பாரூக் அப்துல்லா கூறினார்.

ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை

ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை

புலம்பெயர்ந்தோருக்கு தனி மாநில கோரி காஷ்மீர் பண்டிட் அமைப்பான பானுன் காஷ்மீர் முன்வைத்த இனப்படுகொலை மசோதாவை ஆதரிக்கலாமா என்று அப்துல்லாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் முதலில் மசோதாவின் விவரங்களை பாருங்கள் என்று சொன்னார். மூன்று முறை ஜம்மு காஷ்மீர் முதல்வராக இருந்த பாரூக் அப்துல்லா, இதுபற்றி மேலும் கூறுகையில் "உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், குழு...காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான வன்முறை குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். அப்படி வெளிவந்தால் உலகம் முழுவதும் உள்ள பலரது மனங்களில் தெளிவை உருவாக்கும்.

நாங்கள் வெளியேற்றவில்லை

நாங்கள் வெளியேற்றவில்லை

காஷ்மீர் பண்டிதர்களை வெளியேற்றியது காஷ்மீர் முஸ்லிம்கள் அல்ல. இன்னும் பல காஷ்மீர் பண்டிதர்கள் ஒருபோதும் வெளியேறவில்லை, அவர்கள் இங்கு வாழ்கின்றனர். காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட போது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்து சகோதரர்கள் திரும்பி வந்து நம் அனைவருடனும் நிம்மதியாக வாழாவிட்டால் காஷ்மீர் ஒருபோதும் முழுமையடையாது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம்.

ஒற்றுமைக்காக பாடுபடுவேன்

ஒற்றுமைக்காக பாடுபடுவேன்

மத நம்பிக்கையைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களையும் சமமாக நடத்தும் தனது கட்சியின் சித்தாந்தத்தை தொடர்ந்து நிலைநிறுத்துவேன் "எனது தந்தை ஒருபோதும் இரு தேசக் கோட்பாட்டை நம்பவில்லை. முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் பிற எல்லா மதங்களும் வேறுபட்டவை என்று அவர் ஒருபோதும் நம்பவில்லை. அனைவரும் ஆதாம் மற்றும் ஏவாளின் குழந்தைகள் என்று நாங்கள் நம்புகிறோம். எல்லோருடைய தேவைகளும் ஒன்றே, அதனால் அவர் ஒற்றுமைக்காக கடுமையாக உழைத்தோம். நாங்கள் தொடர்ந்து அதே பாதையில் நிற்போம், எனது கடைசி மூச்சு வரை, அனைவரின் ஒற்றுமைக்காக நான் செயல்படுவேன், "என்று அவர் கூறினார்.

English summary
former Jammu and Kashmir chief minister Farooq Abdullah on Sunday demanded a probe by retired Supreme Court judges into the exodus of Kashmiri Pandits from the valley in early 1990s. we always believe that Kashmir is never going to be complete unless the Hindu brethren come back and live in peace with all of us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X