For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்துக்கு தூண்டினார் பரூக் அப்துல்லா:- மத்திய அரசு பரபர புகார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆயுத போராட்டத்துக்கு தூண்டினார் பரூக் அப்துல்லா- மத்திய அரசு புகார்!-வீடியோ

    ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி ஆயுதமேந்திர போராட இளைஞர்களை தூண்டியதால் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவ் 370ஐ மத்திய அரசு நீக்கியது. முன்னதாக அம்மாநில அரசியல் தலைவர்களான பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பல தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    Farooq Abdullah propagated secessionist ideology, says Centre

    இத்தலைவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் தற்போதைய லோக்சபா எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

    இம்மனு மீது பதிலளித்த மத்திய அரசு, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், பரூக் அப்துல்லா மீது மொத்தம் 27 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

    தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்குதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு

    பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வன்முறைக்கு தூண்டினார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. மேலும் ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரி போராடிய போராளிகளின் தியாகம் வீணாகாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.

    புல்வாமாவில் தாக்குதல் நடத்தியது இந்திய அரசுதானே தவிர பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்றும் பொதுக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவிடம் இருந்து விடுதலை பெற்று தனிநாடாக காஷ்மீர் உருவாக மிகப் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பேரணி ஒன்றில் பேசினர் பரூக் அப்துல்லா; இளைஞர்களை தனிநாடு கோரிக்கைக்காக ஆயுதமேந்தி போராடவும் தூண்டினார் என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன

    இதனையடுத்தே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் தனி அறை ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதர அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. உரிய சட்டப்பூர்வ அனுமதிகள் பெற்று வருவோரைத் தவிர மற்றவர்கள் பரூக் அப்துல்லாவை சந்திக்க அனுமதிக்கப்படுவதில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

    English summary
    Former JK Chief Minister and Loksabha MP Farooq Abdullah has been accused of misusing political position for asking a new generation to pick up arms and propagate secessionist ideology.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X