For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபரூக் அப்துல்லா மீது 27 வழக்குகள்.. வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு மற்றும் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டது.

மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடமாக அறிவிக்கப்படும்.. விஜயபாஸ்கர்மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலி பணியிடமாக அறிவிக்கப்படும்.. விஜயபாஸ்கர்

பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா

அத்துடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

சுற்றுலாவுக்கு அனுமதி

சுற்றுலாவுக்கு அனுமதி

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதால் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. தற்போது வழக்கம் போல் இணையதள சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள், வெளிநபர்கள் வந்து கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பல தலைவர்களின் வீட்டுக்காவல் விலக்கி கொள்ளப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசம்

லடாக் யூனியன் பிரதேசம்

அத்துடன் மத்திய அரசு அறிவித்தபடி ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளன.

3 மாதங்கள் நீட்டிப்பு

3 மாதங்கள் நீட்டிப்பு

இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஃபரூக் அப்துல்லா மீது வன்முறையை தூண்டியது, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒருவரை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை வீட்டுக்காவலில் வைக்க முடியும்.

English summary
Former Jammu and Kashmir Chief Minister Dr. Farooq Abdullah’s detention under the Public Safety Act (PSA) has been extended to three months,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X