For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.113 கோடி ஊழல்: பரூக் அப்துல்லா மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ113 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க தலைவராக கடந்த 2012-ம் ஆண்டு பரூக் அப்துல்லா பதவி வகித்தார். அப்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.113 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.

Farooq to Face CBI in Rs 113 Crore Cricket Scam

இது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மஜித் யாகூப், நிசார் அகமது கான் ஆகியோர் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடக்கோரி இருந்தனர்.

அதில், பரூக் அப்துல்லா தலைவராக இருந்த போது 2 டெண்டர்கள் விட்டதில் முறைகேடு நடந்ததாகவும் போலி கணக்குகள் மூலம் சங்க நிதியில் கையாடல் செய்து சங்க நிர்வாகிகளின் பெயர்களில் வங்கிகளில் பணம் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது பரூக் அப்துல்லா உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ.க்கு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.க்கு உத்தரைவ்டப்பட்டுள்ளது.

English summary
After three years of investigations, the J&K High Court on Thursday ordered a CBI probe into the multi-crore scam in the J&K Cricket Association (JKCA), and set a deadline of six months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X