For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பாடா நிம்மதி.. வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜன.15 வரை கால அவகாசம்

Google Oneindia Tamil News

டெல்லி: வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் பெறுவதில் தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

நாடு முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதியான இன்று முதல் முதல் தேசிய நெடுஞ்சாலைகளின் அனைத்து சுங்க சாவடிகள் அனைத்திலும் பாஸ்டாக் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இதன்படி ஒருவேளை பாஸ்டாக் இல்லாத வாகனங்கள் இன்று முதல் சென்றால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட இரு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது.

 மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு உத்தரவு

பாஸ்டேக் மூலம் வாகனங்கள் செல்லும் வகையில் அனைத்து சுங்கச்சாவடியிலும் உள்ள அனைத்து பாதைகளையும் 100% எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (ETC) வசதி கொண்டதாக மாற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இந்த பணிகள் முழுமையாக செய்யப்பட்டுவிட்டதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை

மக்கள் வாங்கவில்லை

மக்கள் வாங்கவில்லை

இது ஒரு புறம் எனில் இன்னொரு புறம் இன்னும் ஏராளமான மக்கள் பாஸ்டேக் ஸ்டிக்கர் வாங்கி தங்கள் வாகனங்களில் ஒட்டிக்கொள்ளவில்லை.பாஸ்டேக் பெறுதில் தாமதம் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு

25 சதவீத பாதை

25 சதவீத பாதை

பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு பணம் செலுத்த சுங்கச்சாவடியில் ஒரு பாதைதான் வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு ஜனவரி 15 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது. ஆனால் பாஸ்டேக் இல்லாமல் வாகனங்கள் செல்ல 25 சதவீத பாதை தான் இருக்கும் ( ஒருபாதை) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாதைகளில் மட்டுமே பாஸ்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

கடினமாகிவிடும்

கடினமாகிவிடும்

எனவே இதுவரை பாஸ்டேக் வாங்காத வாகன ஓட்டிகள் ஜனவரி 15ம் தேதிக்குள் வாங்கிக்கொண்டால் பெரும் அபராதத்தில் இருந்து தப்பிக்க முடியும்.அத்துடன் விரைவாகவும் சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல இல்லாவிட்டால் 4இல் ஒரு சுங்கச்சாவடி தான் உங்களுக்கு இருக்கும். எனவே பணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்

English summary
Those who have not yet procured their FASTags, have got some relief for the next one month. FASTag relief till January 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X