For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. புதிய திருப்பம்.. இந்தியாவுடன் கைகோர்த்தது சீனா.. பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க முடிவு!

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கான நிதியுதவியை தடுப்பது உள்ளிட்டட நடவடிக்கைகள் விஷயத்தில் சீனாவும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, அமெரிக்கா சவதி உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இணைந்து பாகிஸ்தானுக்கு புதிய கெடு தேதியை நிர்ணயிக்க உள்ளன.

தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை தடுக்கும் சர்வதேச அமைப்பான எப்ஏடிஎப் பாகிஸ்தானுக்கு கடந்த அக்டோபர் மாதம் கெடு விதித்தது. அத்துடன் தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத நாடாக, பாகிஸ்தானை குறிப்பிட்டு சாம்பல் பட்டியலில் சேர்த்தது.

அத்துடன் பாகிஸ்தான், தனது மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கு தொடர வேண்டும். தீவிரவாதிகளுக்கு நிதியுதவியை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதை செய்ய செய்ய தவறினால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு ஆதரவு

இந்தியாவுக்கு ஆதரவு

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பெயருக்கு சில தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கான நிதியுதவியை தடுப்பது உள்ளிட்டட நடவடிக்கைகள் விஷயத்தில் சீனாவும் இந்தியாவுடன் இணைந்துள்ளது, அமெரிக்கா, சவதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இணைந்துள்ளன.

ஜுன் வரை கெடு

ஜுன் வரை கெடு

இந்த நாடுகள் இணைந்து பாகிஸ்தானுக்கு கடுயைமாக எச்சரிக்கை செய்தி அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது ஜுன் மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு புதிய கெடு விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொர்பாக எப்ஏடிஎப் கூட்டத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாக்.கிற்கு ஆதரவு

பாக்.கிற்கு ஆதரவு

தற்போதைய நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதராக பேசும் ஒரே நாடு என்றால் துருக்கி மட்டும். அந்நாடு மட்டும் பாகிஸ்தானுக்கு எப்ஏடிஎப் கூட்டத்தில் ஆதரவாக இருக்கும் என கூறப்படுகிறது. மலேசியா குறித்து தெளிவு இல்லை. இதில் மிகப்பெரிய மாற்றம் என்றால் சீனா இந்தியாவுக்கு ஆதரவாக திரும்பியது தான். கடந்த ஆண்டு மகாபலிபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே தீவிரவாதத்திற்கு எதிராக சுமூகமான பேச்சு நடந்த நிலையில் இந்த மாற்றம் நடந்திருக்கலாம் என்கிறார்கள்.

Recommended Video

    Coronavirus: China decides to clean the currency, just like India's demonetization
    கருப்பு பட்டியல்

    கருப்பு பட்டியல்

    தற்போதைய நிலையில் பாக்கிஸ்தான் FATFன் சாம்பல் பட்டியலில் நீடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை தடுத்தல், அவர்களை கைது செய்து தண்டித்தல் உள்ளிட்ட 13 நிபந்தனைகளை பாகிஸ்தான் செய்யாவிட்டால் அந்த நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவது உறுதி என்றும் கடும் நடவடிக்கை பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

    English summary
    FATF: China and Saudi Arabia are learnt to have joined India, to set new deadline for Pakistan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X