ஜாதி மாறி திருமணம் செய்ததால் மானம் போச்சாம்.. பழி வாங்க மகளை பலாத்காரம் செய்த தந்தை.. கொடுமை!
போபால்: வேறு ஜாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மகளை பழிவாங்குவதற்காக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை.
மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இதுபோன்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் நடந்துள்ளது.
போபால் நகரத்தில் இருந்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது அந்த வனப்பகுதி. இங்கு கடந்த 14ஆம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வன்னியர்களும் 3 மாணவிகள் உயிரோடு எரிப்பும்-ஜெய்பீம் எதிர்ப்புக்கு பதில் காடுவெட்டி குரு பேச்சு வைரல்
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகி இருக்கின்றன.

பலாத்கார சம்பவம்
2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று நினைத்து காவல்துறையினர் முதலில் விசாரணைகளை ஆரம்பித்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில், அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்பலமானது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தியதில் அந்த பெண் பின்னணி தொடர்பான பல விவரங்கள் போலீசாருக்கு தெரிய வந்தன.

கலப்பு திருமணம்
இந்த பெண் தனது குடும்பத்தின் விருப்பத்துக்கு மாறாக வேறு ஜாதியைச் சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்துள்ளார். கணவனும் மனைவியும் சாஜபூர் மாவட்டத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சமீபத்தில் பணி நிமித்தமாக இந்த பெண்ணின் கணவர், சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சென்று உள்ளார். எனவே இந்த பெண் தனது குழந்தையுடன் சீஹோர் மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று இருக்கிறார்.

சகோதரி வீட்டில் பஞ்சாயத்து
அப்போது அந்த சகோதரி தனது தந்தை மற்றும் 23 வயதான தனது தம்பிக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் அங்கே வந்துள்ளார்கள். வேறு சாதி வாலிபரை திருமணம் செய்துகொண்டதாக தந்தையும் சகோதரனும் அந்த பெண்ணிடம் இதுநாள் வரை பேசாமல் இருந்துள்ளார்கள். ஆனால் அங்கு அனைவரும் ஒன்று கூடியதால் மீண்டும் திருமணம் தொடர்பாக காரசார பேச்சு எழுந்துள்ளது. ஒருகட்டத்தில் தங்கள் வீட்டுக்கு வருமாறு மகளை, தந்தை அழைத்துள்ளார். இதை நம்பி அந்த மகள் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் கிளம்பியுள்ளார். கூடவே அவரது அக்காவும் வந்துள்ளார்.

காட்டுக்குள் கொலை
வனப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது இந்த திருமணத்தை முறித்து விடுமாறு மகளிடம் தந்தை கூறியிருக்கிறார். ஆனால் அவர் பதில் ஏதும் பேசவில்லை இதனால் கோபம் அடைந்த அவர், மகளை அடித்து உதைத்து காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவரை கொலை செய்யப் போவதை சகோதரன் மற்றும் சகோதரி இருவரும் அறிந்திருக்கின்றனர். எனவே அவர்கள் வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்று கொண்டனர்.

அம்பலமான பலாத்காரம்
காட்டுக்குள் இழுத்துச் சென்ற தந்தை வேறு ஜாதி நபரை திருமணம் செய்த கோபம் காரணமாக அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதன்பிறகு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை செய்ததை மட்டும் தான் தனது குடும்பத்தாருக்கு அவர் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனையில் பலாத்காரம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதால் இப்போது எந்த விஷயம் தெரிந்து வேறு வழியில்லாமல் வாக்குமூலத்தில் அதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இந்த கொடூர சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.