For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பாவின் பிறந்தநாள்.. திட்டம்போட்டு காய் நகர்த்திய சிந்தியா.. கூண்டோடு பாஜகவில் இணைகிறாரா?

மத்திய பிரதேசத்தில் அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேர் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
    மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா உட்பட 20 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் எல்லோரும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி உள்ளனர். ஆட்சியை கவிழ்க்கும் வகையில் இவர்கள் எல்லோரும் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

     நடு இரவில் மீட்டிங் நடத்திய அமித் ஷா.. சிந்தியாவை வளைக்க திட்டம்? ம.பி ஆட்சியை கவிழ்க்க செம பிளான்! நடு இரவில் மீட்டிங் நடத்திய அமித் ஷா.. சிந்தியாவை வளைக்க திட்டம்? ம.பி ஆட்சியை கவிழ்க்க செம பிளான்!

    இன்று பாஜக

    இன்று பாஜக

    மத்திய பிரதேசத்தில் அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா இன்று காணகிரிஸ் கட்சியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகினார்கள்.இதில் 6 அமைச்சர்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு காங்கிரஸ் கட்சி கவிழும் நிலையில் உள்ளது. அங்கு தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் கமல்நாத் அரசு கண்டிப்பாக கவிழ்ந்துவிடும்.

    பாஜக இணைவார்

    பாஜக இணைவார்

    இந்த நிலையில் சிந்தியா தற்போது பாஜகவில் இணைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிந்தியா தற்போது டெல்லியில்தான் இருக்கிறார். ஆனால் இவர் காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. பாஜக தலைவர்களுக்கு நெருக்கமான இடம் ஒன்றில் இவர் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இவருடன் 20 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைவார்கள் எனப்படுகிறது.

    எல்லோரும்

    எல்லோரும்

    இவர் இன்று தனியாக பாஜகவில் இணைய மாட்டார் கண்டிப்பாக 20 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன்தான் பாஜகவில் இணைவார் என்று கூறுகிறார்கள். இதனால் இன்றே மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த 20 எம்எல்ஏக்களும் பெங்களூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கர்நாடக பாஜக கட்சி காத்து வருவதாக கூறப்படுகிறது.

     அப்பா எப்படி

    அப்பா எப்படி

    சிந்தியாவின் அப்பா, மாதவ்ராவ் சிந்தியாவின் பிறந்த நாள் இன்று. இதற்காக மத்திய பிரதேசத்தில் பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதவ்ராவ் சிந்தியா நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம் ஆனவர். இவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவருக்கும் நெருக்கம். இவர்கள் குடும்பமே காங்கிரஸ் குடும்பம். இந்த நிலையில்தான் சிந்தியா தற்போது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக கிளம்பி இருக்கிறார்.

    மாறி மாறி வந்தார்

    மாறி மாறி வந்தார்

    ஆனால் இவரும் கூட அவ்வப்போது கட்சி மாறி மாறி தான் போட்டியிட்டு இருக்கிறார். மாதவராவ் முதலில் ஜன சங்கத்தில் போட்டியிட்டு வெற்றபெற்றார். அதன்பின் சுயேட்சையாக போட்டியிட்டார். அதன்பின் காங்கிரசில் போட்டியிட்டு வென்றார். அதன்பின் மீண்டும் பாஜக சென்றார். பின் கடைசியாக மீண்டும் காங்கிரஸ் வந்தார். மாதவராவ் 9 முறை எம்பியாக இருந்துள்ளார். சிந்தியா மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளது.

     பிறந்த நாள் விழா

    பிறந்த நாள் விழா

    மாதவ்ராவ் சிந்தியா பிறந்த நாள் விழா இன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சிந்தியா சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிந்தியா மக்கள் முன்னிலையில் பேசுவார். இதில் பாஜவில் இணைவது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்கிறார்கள். தன்னுடைய ஆதரவாளர்கள், தொண்டர்கள் உடன் இன்றே சிந்தியா பாஜகவில் இணையும் அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.

    நேற்று எப்படி

    நேற்று எப்படி

    இதற்காக நேற்று சிந்தியா பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார் என்கிறார்கள். இந்த சந்திப்பு தனியாக நடந்தது என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்த சந்திப்பு வெளிப்படையாக நடந்தது. அதே சமயம் சிந்தியா பாஜகவில் இணைய வாய்ப்பில்லை. ஆட்சியை மட்டும் கவிழ்ப்பார். அதன்பின் தனி கட்சி தொடங்கி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைப்பார். அவரின் குடும்பத்தினர் பாஜகவில் இணைய அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Madhya Pradesh: Father's birthday, Jyotiraditya Scindia may join in BJP today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X