For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கி அதிகாரிகளை திருமணம் செய்ய ஃபட்வா... கொல்கத்தாவில் கொதிந்தெழுந்த யூனியன்கள்!

வங்கிகள் அதிக வட்டி வசூலிக்கும் நிலையில் அதில் இருந்து சம்பளம் பெறும் வங்கி ஊழியர்களை திருமணம் செய்ய கொல்கத்தாவில் ஃபட்வா விதிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    வங்கி அதிகாரிகளை திருமணம் செய்ய ஃபட்வா..

    கொல்கத்தா : வங்கியில் பணியாற்றுவோரையோ அல்லது குடும்பத்தில் யாரேனும் வங்கிப் பணியில் இருந்தாலோ அவர்களுடன் திருமணம் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று கொலகத்தாவில் இஸ்லாமிய மதகுரு ஃபட்வா கொடுத்துள்ளார். இதற்கு வங்கி ஊழியர்கள் அமைப்பு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    தரூர் உலூம் தியோபந்த் என்ற மதகுரு அண்மையில் இஸ்லாமியர்களுக்கு ஃபட்வா ஒன்றை கொடுத்துள்ளார். அதில் வங்கிப் பணியின் மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் மற்றும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வங்கிப் பணியில் இருந்தால் அவர்களுடன் திருமண பந்தம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

    வங்கியில் அதிக வட்டி வசூலிக்கப்படுவதால் அதில் இருந்தே இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதால் இந்த ஃபட்வா கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிப் பணியாளர்களைத் தவிர்த்து தயாள குணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் திருமண பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என்று அந்த மதகுரு அறிவுறுத்தியுள்ளார்.

    நிஜ வாழ்வில் விலகி நிற்பவர்கள்

    நிஜ வாழ்வில் விலகி நிற்பவர்கள்

    இந்த ஃபட்வா குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் அப்துல் சயீத் கான், "இது போன்ற ஃபட்வா கொடுப்பவர்கள் நிஜ வாழ்க்கையை விட்டு எவ்வளவு தூரம் தள்ளி இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. போதுமான படிப்பறிவில்லாத, ஏழை இஸ்லாமிய மக்களை குறி வைத்தே இதுபோன்ற அறிவிப்புகள் கொடுக்கப்படுவதாக" தெரிவித்தார்.

    குரான் என்ன சொல்கிறது?

    குரான் என்ன சொல்கிறது?

    வட்டிக்கு பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என்று தான் குரான் சொல்கிறது. மற்ற விஷயங்களில் வீணாக நேரத்தை செலவு செய்வதை விட இஸ்லாமியர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பான ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி யோசிக்கலாம் என்றும் கான் கூறியுள்ளார். மதகுரு தரூவ் உலூம் அளித்துள்ள ஃபட்வா துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    என்ன சொல்ல வருகிறார்கள்?

    என்ன சொல்ல வருகிறார்கள்?

    அகில இந்திய வங்கிகள் சங்கம், இது போன்ற அறிவிப்புகளில் எல்லாம் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை, எனினும் இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதே போன்று அகில இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கமும், உண்மையில் இந்த ஃபட்வா மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே விளங்கவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

    வித்தியாசமான ஃபட்வாக்கள்

    வித்தியாசமான ஃபட்வாக்கள்

    வங்கி ஊழியர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இந்த ஃபட்வா பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இஸ்லாமிய முறையில் ஒரு செயலை செய்யக் கூடாது என்றால் அதற்கு ஃபட்வா கொடுப்பது வழக்கம். சில நாடுகளில் பெண்கள் ஜுன்ஸ் அணிய ஃபட்வா, இஸ்லாமியப் பெண்கள் யோகா செய்ய ஃபட்வா என்று சில விநோதமான ஃபட்வாக்களும் நடைமுறையில் உள்ளன.

    English summary
    Bank unions in Kolkatta is against over Fatwa issued against marrying bank employees or in a family those who were working in banks instead making marriage proposals with them look for a ‘pious’ families the fatwa further says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X