For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூர்: ரவுடி ஆட்டோ டிரைவரை அடித்து உதைத்த வீரப்பெண்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நள்ளிரவில் ஆட்டோவில் இருந்து இறங்கச் சொல்லி தகராறு செய்த டிரைவரை அடித்து உதைத்து போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார் ஒரு வீரப்பெண். இந்த சம்பவம் பெங்களூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் மடிவாளா அருகே உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ரினி பிஸ்வாஸ் (25). இவர் மாரத்தஹள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் எஞ்ஜீனியராக வேலை செய்கிறார். வருகிறார்.

Feisty woman hits back at rowdy auto driver

கடந்த 18-ம் தேதி உறவினரின் வீட்டுக்கு சென்ற ரினி, இரவு 11 மணி அளவில் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். இரவு 11.45 மணியளவில் மடிவாளா பிரதான சாலைக்கு அருகே ஆட்டோவை நிறுத்திய டிரைவர், "இனிமேல் ஆட்டோ வராது. சாலை சரியாக இல்லை. நீங்கள் வேறு ஆட்டோவில் செல்லுங்கள்" என ரினியிடம் தெரிவித்துள்ளார்.

"நள்ளிரவில் இருட்டாக உள்ளதால் தனியாக செல்ல முடியாது. ஆட்டோவில் ஏறும்போது பேசியவாறு, என்னுடைய‌ வீட்டுக்கு அருகே வந்து விடுங்கள்" என ரினி கூறவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ டிரைவர், ரினியின் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து ஆட்டோவிலிருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரினி, ஆட்டோ டிரைவரை பதிலுக்கு அறைந்துள்ளார். மேலும் அவரது மூக்கிலும் உதைத்துள்ளார். இருப்பினும் ஆட்டோ ஓட்டுநர் அவரை வெளியேற்றிவிட்டு சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த இருவர் சமாதானம் செய்துள்ளனர்.

இதனிடையே, ஆட்டோவையும், டிரைவரையும் போட்டோ எடுத்த ரினி, அவசர போலீஸ் 100-க்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவலை ரினி பிஸ்வாஸின் நண்பர் ஒருவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியின் ட்வீட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

இதை யடுத்து, கமிஷனர் எம்.என்.ரெட்டி மடிவாளா போலீஸாருக்கு இந்த தகவலை தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரினி பிஸ்வாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆட்டோ டிரைவர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-ம் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் ரினி கொடுத்த ஆட்டோவின் பதிவு எண்ணைக் கொண்டு தேடினர். அதனைத் தொடர்ந்து முகமது அலி என்கிற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
It would have been yet another attack on a helpless woman by a rowdy autorickshaw driver. But Rini Biswas didn't let that happen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X