
மது போதை..! பலாத்காரத்தில் முடிந்த பிபிஓ பார்ட்டி! தனியாக சிக்கிய பெண்ணை சிதைத்த சீனியர்கள்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தலைநகரான கொல்கத்தாவில் கடந்த வாரம் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த அலுவலக விருந்தின் போது 30 வயதான பிபிஓ பெண் நிர்வாகி ஒருவர் சக ஊழியர்களாலேயே பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
மம்தாவின் ஆட்சிக் காலத்தில் மேற்கு வங்காளத்தில் பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. அதை நிரூபிப்பது போலவே அங்கு பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
பெண்களின் அந்தரங்க பகுதிகளைத் தொடுவது பாலியல் சீண்டல்தான் - கொல்கத்தா ஹைகோர்ட் நச் தீர்ப்பு

வங்காளத்தில் அதிர்ச்சி
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் விருந்துக்குச் சென்ற சிறுமி ஒருவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரின் மகன் உள்ளிட்ட 5 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்போது கொல்கத்தாவில் கடந்த வாரம் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த அலுவலக விருந்தின் போது 30 வயதான பிபிஓ பெண் நிர்வாகி ஒருவர் சக ஊழியர்களாலேயே பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கடந்த சனிக்கிழமை விருந்து முடிந்ததும் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறி, தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். நான்கு நாட்கள் வீட்டில் தங்கியிருந்த அவர், அதற்கு முன் புகார் அளிக்க தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மூன்று பேர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாஸ்கர் பானர்ஜி, சிரஞ்சிப் சூத்ரதர் மற்றும் இந்திராணி தாஸ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து, மேலும் அவர்கள் மீது கூட்டு பாலியல் பலாத்காரம் தொடர்பான ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிபிஓ விருந்து
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் பிபிஓ நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி வந்த நிலையில், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் விருந்தினர் மாளிகையில் மூன்று அறைகள் மற்றும் ஒரு லாபியை உள்ளடக்கிய ஆறாவது தளம் முழுவதையும் சனிக்கிழமை விருந்துக்கு BPO நிறுவனம் பதிவு செய்திருந்தது.விருந்தில் இருந்த எட்டு பேரில் ஆறு பேர் பெண்கள், அனைவரும் டெலி-காலர் குழுவைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள தாஸ் அவர்களின் குழுத் தலைவராகவும், சூத்ரதர் மற்றும் பானர்ஜி மூத்த மேலாளர்களாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

போலீசில் புகார்
பார்ட்டி தொடங்கி அவர்கள் மது குடிக்கத் தொடங்கிய பிறகு - சூத்ரதரும் பானர்ஜியும் அறை ஒன்றிற்கு தாஸ் தன்னை அழைத்துச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் தனக்கு தூக்கம் வர ஆரம்பித்ததாகவும், மயக்கமடைந்ததாகவும் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். அவர் எழுந்தபோது, தான் நிர்வாணமாகவும் படுக்கையில் தனியாகவும் இருப்பதைக் கண்டு, தன் சக ஊழியர்களை அழைத்தாள், ஆனால் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்கள் வெளியேறிவிட்டதாகச் கூறப்படுகிறது. அப்போதுதான் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அந்தப் பெண்ணுக்கு தெரியவந்ததையடுத்து புதன்கிழமை அவர் புகார் அளித்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர் மேலும் பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.