For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உர ஊழல்...சிக்கினார் ராஜஸ்தான் முதல்வரின் சகோதார்... அமலாக்கத்துறை ரெய்டு...

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: விவசாயிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களில் அமலாககத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் உர ஊழல் தொடர்பாக அமலாத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்கு சொந்தமான இடங்களிலும் நடந்து வருகிறது. அசோக் கெலாட்டின் மூத்த சகோதரர் இவர், ஜோத்பூர் உள்பட ராஜஸ்தானில் சில இடங்கள், மேற்குவங்கத்தில் இரண்டு இடங்கள், குஜராத்தில் நான்கு இடங்கள், டெல்லியில் ஒரு இடம் என்று சோதனை நடந்து வருகிறது.

Fertiliser scam: Rajasthan CM Ashok Gehlot’s brother premises raided by ED

மத்தியில் ஐக்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2007 - 2009ஆம் ஆண்டுகளில் விவசாயிகளுக்கான மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த உரத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக அக்ரசென் கெலாட் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்து அரசு தரப்பில் வெளியாகி இருந்த செய்தியில், ''விவசாயிகளுக்கான மானிய விலை உரத்தை குறைந்த விலைக்கு வாங்கி, தனக்கு சொந்தமான அனுபம் கிரிஷி என்ற நிறுவனத்தின் மூல வியட்நாம் மற்றும் மலேசியாவுக்கு அக்ரசென் கெலாட் ஏற்றுமதி செய்தார். அந்த வகையில் அவர் மீது புகார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளனர்.

முன்பு சுங்கவரி அதிகாரிகளால் வழக்கு பதிவு செய்யபப்ட்டு பின்னர் அமலாக்கத்துறை அந்த வழக்கை சட்ட விரோத பணபரிமாற்ற வழக்காக மாற்றியது. மூன்று நிறுவனங்கள் மற்றும் அவர்களது உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களில் ஒருவர்தான் அக்ரசென் கெலாட். இதையடுத்து அரசுக்கு அபராதமாக ரூ. 60 கோடியை அக்ரசென் கெலாட் செலுத்தி இருக்கிறார்.

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ரஜினிகாந்த் ட்வீட்.. டிரெண்டாகும் #கந்தனுக்கு_அரோகரா

இந்த சோதனை குறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், ''ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக செய்யும் சதி வேலை இது'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரமும் வருமான வரித்துறை ராஜஸ்தானில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு இருந்தது. இந்த மாநிலத்தில் இருக்கும் ஹைட்ரோபவர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு இருந்தது. இந்த நிறுவனங்களுக்கு இடையே பெரியளவில் பண பறிமாற்றம் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

இந்த சமயத்தில்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் நெருக்கடிகள் முற்றி வந்தது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

English summary
Fertiliser scam: Rajasthan CM Ashok Gehlot’s brother premises raided by ED
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X