For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்படியே "பெவிக்கால்" போட்டு ஒட்டியது போல வாயடைச்சுப் போயிருவீங்க பாஸு இதைப் பார்த்தா!

Google Oneindia Tamil News

டெல்லி: சில விளம்பரங்கள் அப்படியே நமது மனசுக்குள் வந்து அப்பிக் கொண்டு விடும். அவ்வளவு சீக்கிரம் மனசை விட்டு அகலாது. அப்படிப்பட்ட விளம்பரங்களில் ஒன்றுதான் பெவிக்கால் விளம்பரம்.

பெவிக்கால் விளம்பரங்கள் படு பாப்புலர் ஆனவை. மறக்க முடியாதவை. இப்போது லேட்டஸ்டாக ஒரு புதிய விளம்பரத்தைக் களம் இறக்கிக் கலக்கியுள்ளது பெவிக்கால்.

ஓகில்வி மாதர் இந்தியா நிறுவனம், பெவிக்காலுக்காக உருவாக்கியுள்ள விளம்பரம் செமையாக இருக்கிறது. உடனடியாகவும் ஹிட் ஆகியுள்ளது.

கோவிந்தா ஏக்.. தஹி ஹந்தி அனேக்

கோவிந்தா ஏக்.. தஹி ஹந்தி அனேக்

கோவிந்தா ஏக்.. தஹி ஹந்தி அனேக் என்று பெயரிடப்பட்ட இந்த விளம்பரம் 2 நாட்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது. இப்போது இது ஹிட் ஆகியுள்ளது.

கோகுலாஷ்டமியை முன்வைத்து

கோகுலாஷ்டமியை முன்வைத்து

கிருஷ்ண ஜென்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமியை கருவாக வைத்து உருவாக்கியுள்ளனர். கோகுலாஷ்டமியின் 2வது நாளின்போது கொண்டாடப்படும் உறியடியை மையமாக வைத்து வந்துள்ளது இந்த விளம்பரம்.

பானையை உடைக்க மனித பிரமிடு

பானையை உடைக்க மனித பிரமிடு

உயரத்தில் கட்டப்பட்டு வைத்துள்ள மண் பானையை உடைக்க மனிதர்களைக் கொண்ட பிரமிடு அமைக்கிறார்கள். பின்னர் பானை உள்ள இடத்தை நோக்கி அந்த மனிதப் பிரமிடு அப்படியே கிளம்பிச் செல்கிறது.

லாவகமாக

லாவகமாக

குறுகலான தெருக்களுக்கு மத்தியில் இந்த மனிதப் பிரமிடு படு லாவகமாக கவனமாக நடந்து செல்கிறது. போகும் வழியெல்லாம் மக்கள் இவர்களை ஆச்சரியத்தோடும், உற்சாகத்தோடு் கூடி வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகிறார்கள்.

சிந்தாமல் சிதறாமல்

சிந்தாமல் சிதறாமல்

மிக உயரமான மனிதப் பிரமிடாக இருந்தாலும் கூட யாரும் விழவில்லை. சாயவில்லை. அப்படியே பத்திரமாக போய்ச் சேருகிறார்கள், பானை கட்டப்பட்டுள்ள இடத்திற்கு.

பெவிக்கால்

பெவிக்கால்

கடைசியில் உறியடி இடத்திற்கு வந்த பிறகு மக்கள் அவர்கள் மீது வண்ண நீரைத் தெளிக்கிறார்கள். அப்போது அவர்களின் சட்டையில் தண்ணீர் பட்டு அதில் பெவிக்கால் என்ற வார்த்தை தெரிகிறது. விளம்பரம் முடிகிறது.

செம வரவேற்பு

செம வரவேற்பு

இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 71 பார்வைகள் கிடைத்துள்ளன.

இதை மறக்க முடியுமா

லேட்டஸ்ட் விளம்பரத்தை விடுங்க.. இந்த பழைய விளம்பரத்தை மறக்க முடியுமா.. என்னா ஒரு கற்பனை.. எப்படிப்பட்ட படமாக்கம் பாருங்கள்...!

English summary
Fevicol’s new dahi-handi ad garners eyeballs on YouTube
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X