For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா சிறந்த நண்பரை இழந்துவிட்டது.. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பிரணாப், மோடி, சோனியா இரங்கல்

பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ 90 வயதில் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பரை இழந்து விட்டோம் என்று பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Fidel Castro one of the most iconic personalities says Modi

பிரணாப் முகர்ஜி

புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு குடியரத்சு தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த நண்பராக பிடல் காஸ்ட்ரோ விளங்கினார் என பிரணாப் புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி இரங்கல்

பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவரக்ள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிடல் காஸ்டோர மறைவுக்கு தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த துக்கமான நேரத்தில் கியூபா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா துணை நிற்கும். 20 ஆம் நூற்றாண்டின் மாமனிதர்களில் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவர். இந்தியா தனது உற்ற நண்பனை இழந்து தவிக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி இரங்கல்

பிடல் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவுக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, இந்திய மக்களின் இதயங்களில் பிடல் காஸ்ட்ரோ என்றும் உயிர்ப்புடன் இருப்பார் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி

ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மேலும் சமூகத்தின் தூண்டுகோலாக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ என சீதாராம் யெச்சூரி புகழாரம் சூட்டியுள்ளார்.

English summary
President Pranb Mukherjee on Saturday, condoled the death of Cubas revolutionary leader and former President Fidel Castro, who died on Saturday at the age of 90. Fidel Castro was one of the most iconic personalities of the 20th century. India mourns the loss of a great friend Modi said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X