For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லா கொண்டாடுனீங்களா.. கனடா பிரதமரை கமல் ஸ்டைலில் கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி!

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கனடா பிரதமரை கட்டிப்பிடித்து வரவேற்ற மோடி- வீடியோ

    டெல்லி: டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்து இருக்கிறார். 8 நாள் பயணத்தில் இவ்வளவு நாட்கள் கழித்து இப்போதுதான் அவர் இந்திய பிரதமரால் வரவேற்கப்பட்டு இருக்கிறார்.

    டிவிட்டரில் கூட பிரதமர் மோடி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் கேபினெட் மத்திய அமைச்சர் கூட அவரை சென்று பார்க்கவில்லை. இணையமைச்சர் ஒருவர் மட்டும் அவரை சென்று வரவேற்றார்.

    இது பெரிய அளவிற்கு பிரச்சனையை உருவாக்கியது. உலக அளவில் இதற்கு கண்டனங்கள் எழுந்தது.

    காரணம்

    காரணம்

    சீக்கிய புரட்சி அமைப்புகளுக்கு கனடா ஆதரவு அளித்து வருகிறது. சீக்கியர்களின் காலிஸ்தான் கோரிக்கைக்கும் கனடா ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல் பாஜகவிற்கு நெருக்கமான ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு கனடா இயக்கங்கள் எதிராக இருக்கிறது.

    சந்திப்பு

    சந்திப்பு

    இதனால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வரவேற்பு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ ''நான் வரவேற்பை எதிர்பார்த்து இங்கு வரவில்லை. என்னை யாரும் கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை'' என்று மோடியின் செயலை கிண்டல் செய்து கூட பேசி இருந்தார்.

    மோடி டிவிட்

    இதுகுறித்து மோடி தனது டிவிட்டரில் ''இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றாக கொண்டாடி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரின் குழந்தைகளை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன். இது 2015ல் நான் கனடா போன போது எடுக்கப்பட்ட புகைப்படம்'' என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    மோடி சந்தித்தார்

    மோடி சந்தித்தார்

    இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மோடி ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்துள்ளார். ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. அவர் குடும்பத்தையும் மோடி வரவேற்றார்.

    பேச்சு வார்த்தை

    பேச்சு வார்த்தை

    இன்று இவர்கள் பல முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். காலநிலை மாற்றம், ஸ்பேஸ் தொழில்நுட்பம், ராணுவ உதவி குறித்து பேச உள்ளனர். ஆனால் இதில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    சீக்கியர்கள்

    சீக்கியர்கள்

    அதேபோல் இதில் முக்கியமாக சீக்கியர்கள் பிரச்சனை குறித்தும் பேசப்பட இருக்கிறது. காலிஸ்தான் குறித்த இந்திய நிலைப்பாட்டை மோடி அறிவிப்பார். மேலும் சீக்கிய போராளிகளுக்கு கனடா ஆதரவு அழிப்பது குறித்தும் மோடி பேச இருக்கிறார்.

    English summary
    PM Narendra Modi receives Canadian Prime Minister Justin Trudeau & his family at Rashtrapati Bhawan. Canadian Prime Minister Justin Trudeau and family welcomed by PM Modi at Rashtrapati Bhawan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X