For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறந்துடாதீங்க.. இந்த 4 நிதி சார்ந்த வேலைகளுக்கு டிச.31 தான் கடைசி தேதி... விவரங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: 2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் நிதி சம்பந்தமான நான்கு முக்கிய பணிகளை முடித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் 2020ம் ஆண்டுக்கானநிதி சார்ந்த உங்கள் திட்டமிடலுக்கு சிக்கலாகி விடும்.

டிசம்பர் 31 அன்றுக்குள் முடிக்க வேண்டிய பணம் தொடர்பான நான்கு காலக்கெடுக்கள் உள்ளன.

இந்த நான்கு காலக்கெடுக்கள் என்ன, பணிகளை முடிக்காததால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

என்ஆர்சி – தடுப்பு முகாம்களை அமல் படுத்துவது ஏன் மிக, மிக கடினமானது?என்ஆர்சி – தடுப்பு முகாம்களை அமல் படுத்துவது ஏன் மிக, மிக கடினமானது?

31ம்தேதி கடைசி தேதி

31ம்தேதி கடைசி தேதி

உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைத்துவிடுங்கள். டிசம்பர் 31 க்குப் பிறகு இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது. ஏப்ரல் 1, 2019 முதல், வருமான வரித் துறை ஆதார் உடன் பான் இணைப்பதை கட்டாயமாக்கியது. குறிப்பாக வருமான வரி அறிக்கையை (ஐடிஆர்) தாக்கல் செய்யும்போது, அவசியம். ஆதார் இணைக்கும் காலக்கெடு ஏற்கனவே செப்டம்பர் 30 முதல் 2019 இல் இருந்து பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் வரும் டிசம்பர் 31 தான் கடைசி நீட்டிப்பு என்று சொல்லப்படுகிறது. எனவே பான் கார்டை காப்பாற்ற ஆதார் உடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைத்துவிடுங்கள்.

5000 அபராதம்

5000 அபராதம்

உங்கள் வருமானம் குறித்த கணக்கை (ITR) இதுவரை தாக்கல் செய்யவில்லை என்றால் டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்துவிடுங்கள். தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்காக ரூ.5000அபாரதம் செலுத்த வேணடும். ஒருவேளை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்யாமல் ஜனவரியிலோ அல்லது அடுத்த 3 மாதத்திற்குள்ளோ தாக்கல் செய்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

 ஈ.எம்.வி சிப் அட்டை

ஈ.எம்.வி சிப் அட்டை

உங்களிடம் இன்னும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) காந்தக் கோடு (magnetic stripe ) ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு இருந்தால், டிசம்பர் 31 த் தேதி உடடன் அது பயனற்றதாகிவிடும், அதாவது வங்கிகள் அதை செயலிழக்கச் செய்வார். எனவே நீங்கள் அதை ஈ.எம்.வி சிப் மற்றும் பின் அடிப்படையிலான அட்டையாக மாற்ற வேண்டும். அப்போது தான் உங்கள் ஏடிஎம் அட்டையும் செல்லுபடியாகும். புதிய ஈ.எம்.வி சிப் அடிப்படையிலான டெபிட் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் இதுவரை அதைப் பெறாதவர்கள் உடனே அவர்கள் கணக்கு வைத்துள்ள எஸ்பிஐ கிளைக்கு செல்ல வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்கள்

வடகிழக்கு மாநிலங்களுக்கு 2019-20 நிதியாண்டிற்கான மூன்றாம் தவணை அட்வான்ஸ் வரியை செலுத்துவதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நீட்டித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அண்மையில் ஏற்பட்ட போராட்டங்கள் காரணமாக , அதன் தேதியை டிசம்பர் 15, 2019 இருந்து டிசம்பர் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

English summary
Link your PAN with Aadhaar, sbi atm card, itr filling, and advance tax that all 4 financial tasks you must finish before December 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X