For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

Google Oneindia Tamil News

அமராவதி: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வந்த ஹோட்டலில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து - வீடியோ

    நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவை நிரம்பிவிட்டன. இதனால் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள், தனியார் ஹோட்டல்கள், வர்த்தக மையங்களில் கொரோனா வார்டுகளை அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Fire broke out in Vijayawada hotel led 7 corona patients died

    அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு ஹோட்டலில் கொரோனா தனிமை மையம் அமைக்கப்பட்டது. இந்த கொரோனா மையத்தில் 40 நோயாளிகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் 10 பேர் என மொத்தம் 50 பேர் இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த ஹோட்டலில் சற்று நேரத்திற்கு முன்பு தீப்பிடித்தது. இதனால் நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடினர். இந்த விபத்திலிருந்து உயிர் பிழைக்க மாடிகளில் இருந்து குதித்தும், தப்ப முயற்சித்தும் தீயில் கருகி 11 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.

    Fire broke out in Vijayawada hotel led 7 corona patients died

    மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து மின்கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என தெரிகிறது.

     தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்.. பால், மருந்தை தவிர அனைத்து கடைகளும் மூடல் தமிழகத்தில் இன்று தளர்வில்லா ஊரடங்கு அமல்.. பால், மருந்தை தவிர அனைத்து கடைகளும் மூடல்

    English summary
    Fire broke out in a hotel in Vijayawada which as corona care centre. 7 died in this accident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X