For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து.. 22 பேர் மீட்பு

எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா என்ற சரக்கு கப்பல் கொல்கத்தா துறைமுகம் அருகே தீ விபத்துக்குள்ளானது. கப்பலில் இருந்த தொழிலாளர்கள் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் மஸ்தான் நீக்கம் | கொல்கத்தா கப்பலில் தீ விபத்து- வீடியோ

    கொல்கத்தா துறைமுகம் அருகே சண்ட்ஹெட்ஸில் எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா என்ற சரக்கு கப்பல் நேற்று இரவு தீ விபத்துக்குள்ளானது. கப்பல் பணியாளர்கள் 22 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

    எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா என்ற உள் நாட்டு கண்டெய்னர் சரக்கு கப்பலின் மேல்தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஹால்டியாவிலிருந்து உடனடியாக கடலோர பாதுகாப்பு படை கப்பல் மீட்பு பணிக்காக புறப்பட்டுச் சென்றது. அப்போது கடற்கொந்தளிப்பும் பலத்த காற்றும் வீசியதால் தீ மலமலவென பரவியது. இதனால், கப்பல் 70 சதவிகிதம் அளவுக்கு தீக்கிரையானது.

    Fire on-board MV SSL Kolkata; 22 crew members rescued

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு படை கப்பல் ராஜ்கிரன் மற்றும் டார்னியரும் தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்துக்குள் தீ விபத்துக்குள்ளான கப்பல் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தன. அப்போது அந்த கப்பல் 70 சதவிகித அளவுக்கு தீக்கிரையாகியிருந்தது. இதனால், கேப்டன் அந்த சரக்கு கப்பல் தீயை அனைத்து மீட்கும் முயற்சியைக் கைவிடுவதற்கு முடிவு செய்தார். தீ விபத்து ஏற்பட்ட கப்பலில் இருந்த கப்பல் பணியாளர்கள் 22 பேரை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், கப்பலில் இன்னும் எஞ்சியுள்ள மற்ற பணியாளர்களையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா கப்பல் அதிலிருந்த கண்டெய்னர்கள் ஸ்ரேயே ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த கப்பல் கிருஷ்ணபட்டினத்திலிருந்து கொல்கத்தா வரை நீண்ட தொலைவு இயக்கப்படும் கப்பல். நேற்று இரவு 10.25 -க்கு கப்பலின் மேல் தளத்தில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கப்பலின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கப்பல் தற்போது கொல்கத்தா துறைமுகத்துக்கு அருகே சண்ட்ஹெட்ஸில் உள்ளது.

    இந்த தீ விபத்து குறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த கப்பலில் இருந்து கிடைத்த தகவலின்படி கப்பலின் மேல் தளத்தில் இருந்து மீட்கப்பட்ட 22 கப்பல் பணியாளர்களில் ஒருவருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த தீ விபத்து குறித்து பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த கப்பலில் இருந்து கிடைத்த தகவலின்படி கப்பலின் மேல் தளத்தில் இருந்து மீட்கபப்ட்ட 22 கப்பல் பணியாளர்களில் ஒருவருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    English summary
    MV SSL Kolkata, a domestic merchant container vessel reported fire onboard on June 13. The coast guard ship was immediately dispatched from Haldia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X