For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் பாய்ந்தது முதல் வழக்கு

Google Oneindia Tamil News

பரேலி: உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான புதிய சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பாய்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க வகை செய்யும் லவ் ஜிகாத்துக்கு எதிரான அவசர சட்டத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. இதனடிப்படையில் லவ் ஜிகாத் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க முடியும்.

First case under religious conversion law registered in UP

இந்த தடை சட்டத்துக்கு உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலும் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து உடனடியாக லவ் ஜிகாத் தடை சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷாவிவசாயிகள் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என சொல்லவே இல்லை: அமித்ஷா

பரேலி மாவட்டத்தில் ஒரு பெண்ணை மதமாற்றி திருமணம் செய்ய மோசடியில் சிலர் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது. இதனடிப்படையில் லவ் ஜிகாத் தடை சட்டத்தின் கீழ் தியோரனியா காவல்நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A case under anti love jihad law was registered at Deorania Police station of Bareilly in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X