For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

244 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வந்து.. நங்குன்னு நின்ற தேஜாஸ்.. கோவாவில் அசத்தல் சாதனை!

Google Oneindia Tamil News

கோவா: இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜாஸ் போர் விமானத்தின் கடற்படை வெர்சன் தனது முக்கிய சோதனை ஓட்டம் ஒன்றை நேற்று வெற்றிகரமாக முடித்துள்ளது.

முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள போர் விமானம் தேஜாஸ். இலகு ரக போர் விமானமான தேஜாஸின் கடற்படை வெர்சனின் சோதனை ஓட்டம் கோவாவில் உள்ள சோதனை மையத்தில் நடந்து வருகிறது.

Arrested Landing என்பது நேற்று நடந்த சோதனைக்குப் பெயராகும். அதாவது அதி வேகத்தில் வந்து தரையிறங்கி அப்படியே நிற்பது என்று பொருள். சாலையில் போகும்போது சடர்ன் பிரேக் போடுகிறோமே.. கிட்டத்தட்ட அது போலத்தான்.

சிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசுசிகரெட் துண்டுகள், பேனர்கள் உள்பட 12 பிளாஸ்டிக்குகள் மீது தடை விதிக்கும் மத்திய அரசு

சடர்ன் பிரேக்

இதுபோல அரெஸ்டட் லேன்டிங் சாதனையை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள்தான் வெற்றிகரமாக செய்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா கூட சமீபத்தில்தான் இந்த சாதனையை செய்தது.

2 விநாடிகளில்

2 விநாடிகளில்

மணிக்கு 244 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து வந்த தேஜாஸ் டெஸ்ட் ரன்வேயில் இறங்கி 0 கிலோமீட்டருக்கு மாறி டக்கென நின்று அனைவரையும் அதிசயிக்க வைத்தது. 244 கிலோமீட்டர் என்பதிலிருந்து ஜீரோ கிலோமீட்டராக மாற அது வெறும் 2 விநாடியே எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சோதனைகள் தொடரும்

சோதனைகள் தொடரும்

இதுபோன்ற மேலும் பல அரெஸ்டட் லேன்டிங் சோதனை தொடர்ந்து நடத்தப்படும். அனைத்து சோதனைகளும் வெற்றி பெற்ற பின்னர், ஐஎன்எஸ் விக்கிராமதித்யா போர் விமானத்தில் இந்த சோதனை செய்து பார்க்கப்படும். அது வெற்றி பெற்ற பின்னரே கடற்படையில் தேஜாஸ் சேர்க்கப்படும்.

எச்ஏஎல் தேஜாஸ்

எச்ஏஎல் தேஜாஸ்

கோவா சோதனை மையத்தில் கடந்த மே மாதம் முதல் இதுவரை 60 முறை தேஜாஸ் சோதனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் உள்ள எச்ஏஎல் நிறுவனம்தான் தேஜாஸ் போர் விமானத்தைத் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The First ever Tejas Jet's Naval version's arrested landing test visual has become viral in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X