For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய வரலாற்றில் முதல் முறையாக... குடியரசு தினத்தில் ராணுவ பெண்கள் பிரிவு அணிவகுப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய குடியரசு தின வரலாற்றில் முதல்முறையாக, ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவினரும் முதன்முறையாக அணிவகுப்பு நிகழ்த்திக் காண்பித்தனர்.

இன்று குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தொழில் நுட்பத்தில் உருவான நவீன ரக ஆகாஷ் ஏவுகணை, நீர் மூழ்கி எதிர்ப்பு விமானம் பி-81, நவீன மிக் 29 ரக போர் விமானம், பீஷ்மா போர் டாங்கி, தானியங்கி பிரமோஷ் ஏவுகணை மற்றும் அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஆகியவை முதலில் அணிவகுத்து வந்தன.

First-ever women's contingent at Republic Day parade

தொடர்ந்து இந்திய ராணுவத்தில் பெண்களின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் பெண்களின் முப்படை வீரர்களின் அணிவகுப்புக்கு 154 பெண் அதிகாரிகள் தலைமை ஏற்று நடத்தி வந்த னர். 25 வயதாகும் கேப்டன் திவ்யா அஜித் குமார் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

"நாம் அனைவரும் சமம் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். நாங்கள் ராணுவ தினத்தின் முதன் முறையாக அணிவகுத்து சென்றோம். தற்போது குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக கலந்து கொள்கிறோம். நாங்கள் போரிடும் சக்தியாக இருக்க விரும்புகிறோம். எனக்கு நம்பிக்கை உள்ளது நாங்கள் விரைவில் முதலில் வருவோம்" என்று செய்தியாளர்களிடம் கூறிய திவ்யா, ராணுவ விமான படை பிரிவை சேர்ந்தவராகும்.

'நாரி ஷக்தி' அதாவது பெண்களின் ஆற்றல் என்ற பெயரில் இந்த அணிவகுப்பு முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது.

அவர்களைத் தொடர்ந்து 1,200 சிறுவர் சிறுமி களின் பாரம்பரிய நடனம் இடம் பெற்றது. தீரச் செயல் புரிந்ததற்காக தேர்வு செய்யப்பட்ட 20 சிறுவர்-சிறுமிகளும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அணிவகுப்புகளும், கலை நிகழ்ச்சிகளும் இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடை பெற்றது. அதை ஒபாமா, பிரணாப்முகர்ஜி, மோடி உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் அமர்ந்தவாறு கண்டுகளித்தனர்.

English summary
India witnessed the first march by women army, navy and air force personnel at the 66th Republic Day parade on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X