For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய டிஷ் சாப்பிட்டு, பனாரஸ் பட்டுப்புடவைகளை பார்வையிட்ட ஆப்பிரிக்க 'முதல் பெண்மணிகள்'!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய-ஆப்பிரிக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர் மனைவிகள் (முதல் பெண்கள்) முன்னிலையில், நம் நாட்டு பட்டு ஆடை மகிமையை எடுத்துரைக்கும் வகையில் பெண்கள் பேஷன் ஷோ நடத்தி காண்பித்தனர்.

தலைநகர் டெல்லியில், கடந்த இரு நாட்களாக இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாடு நடைபெற்றுவருகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களின் மனைவிகளுக்கு, இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட அரசு முடிவு செய்தது.

First ladies from 17 African nations attend fashion show in Delhi

இதையடுத்து இந்தியா வந்துள்ள ஆப்பிரிக்க நாட்டு அதிபர்களின் மனைவிகள் 17 பேர், அக்ஷர்தாம் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வாரணாசியின் புகழ்பெற்ற பனாரஸ் பட்டு ஆடைகளை அணிந்து இளம் பெண்கள் கேட் வாக் சென்றனர். அந்த ஆடைகள் பற்றிய விவரங்களை அதிபர்களின் மனைவிகள் கேட்டறிந்தனர்.

பின்னர், இந்தியாவின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் குனால்கபூர் தயாரித்த உணவு சாப்பிட்டனர். இரவில், ஆப்பிரிக்க அதிபர்களுக்கும், அவர்கள் மனைவிமார்களுக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

English summary
First Ladies from 17 African nations, whose spouses are in the city to participate in the third India-Africa Forum Summit, attended a fashion show in New Delhi. The First Ladies went for a field trip in the national capital, which was tailor-made to give them a first-hand experience of mini-India, said media reports. As part of this tour, the First Ladies first went to Akshardham Temple, a
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X