For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் சோலாரில் இயங்கும் பசுமை ரயில் அறிமுகம்... கோவை- மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கம்!

இந்தியன் ரயில்வே-யின் பசுமை திட்ட தொடக்கத்தின் முக்கிய நிகழ்வாக, தென்னக ரயில்வேயின் ஜனசதாப்தி ரயிலில் ‘கோ கிரீன் கோச்’ பசுமை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சேலம் : இந்தியன் ரயில்வே-யின் பசுமை திட்ட தொடக்கத்தின் முக்கிய நிகழ்வாக, தென்னக ரயில்வேயின் ஜனசதாப்தி ரயிலில் 'கோ கிரீன் கோச்' பசுமை பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. சோலார் பவருடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பெட்டிகள் கோவை-மயிலாடுதுறை வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோலார் பவரில் இயங்கும் ரயில் பெட்டிகளைக் கொண்ட தென் மாநிலத்தின் முதல் பசுமை ரயில் விரைவில் கோவை-மயிலாடுதுறை வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. சேலத்தில் நடைபெற்ற இத்திட்டத்தின் தொடக்க விழாவில் தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி, இந்த்-ஆஸி சோலார் பிரைவேட் லிமிடெட் பொது மேலாளர் பாலசுப்ரமணி, நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலா பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியை பயன்படுத்த ஆர்வம் காட்டிவரும் தெற்கு ரயில்வே, 'கோ கிரீன் கோச்' என்ற அடிப்படையில் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளை தென்னிந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மேட்டுப்பாளையம், சேலம்-மயிலாடுதுறை ஆகிய ரயில்களில் சோதனை அடிப்படையில் ரயில் பெட்டிகளின் மேற்கூரையில் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்த மின்சாரம் ரயில் பெட்டியில் உள்ள மின்விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும். தென்னக ரயில்வேயின் சேலம் ரயில்வே கோட்டத்துக்காக 'கோ கிரீன் கோச்' திட்டத்தை சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு

16 சோலார் பிளேட்டுகள்

16 சோலார் பிளேட்டுகள்

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் திட்ட வளர்ச்சி இயக்குநர் பாலா பழனி பசுமை ரயில் குறித்து பேசினார். அப்போது பெட்டியில் உள்ள அனைத்து மின் விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய வகையில், ஜன சதாப்தி ரயிலின் பெட்டிகள் மீது 16 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

4.8கி.வாட் மின்சாரம் தயாரிக்கும் ரயில்

4.8கி.வாட் மின்சாரம் தயாரிக்கும் ரயில்

சூரிய சக்தியை பயன்படுத்தி ரயில் பெட்டிகளில் உள்ள மின் விளக்குகள், ஃபேன்கள் ஆகியவற்றுக்கு தேவைப்படும் 4.8 கி.வாட் மின்சாரத்தை தயாரிக்கக்கூடிய இந்தியாவின் முதல் ரயில் இதுவாகவே இருக்கும் என்றும் பாலா பழனி கூறினார். ஜன சதாப்தியின் குளிர்சாதன வசதியற்ற 6 பெட்டிகள் ஒவ்வொன்றின் கூரை மீதும் தலா 16 சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும்

என்றும் அவர் தெரிவித்தார்.சூரிய வெளிச்சம் இல்லாத நேரங்களில் ரயில் பெட்டிகளுக்கு மின்சாரம் கொடுக்கும் வகையில் பேட்டரிகளும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் என்று பாலா பழனி கூறினார்.

நாள் முழுவதுக்குமான மின்சாரம்

நாள் முழுவதுக்குமான மின்சாரம்

நிறுவனத்தின் பொறியியல் மேலாளர் சண்முகவடிவேல் சோலார் பிளேட்டுகளால் தயாரிக்கப்படும் மின்சாரம் குறித்து பேசினார். அப்போது இத்திட்டத்தில் ரயில் பெட்டிகளில் இரவு நேரத்தில் ஃபேன்கள், விளக்குகளை இயக்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் மட்டுமல்லாமல் நாள் முழுவதும் தேவைப்படும் மின்சாரத்தை தயாரிக்கவும் முடியும் என்றார். எனினும், குளிர்சாதன வசதி

கொண்ட ரயில்பெட்டிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு இதில் மின்சாரம் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

700 லிட்டர் டீசல் மிச்சம்

700 லிட்டர் டீசல் மிச்சம்

நிறுவனத்தின் திட்ட மேலாளர் சரவணகுமார் கூறுகையில்,"ரயில் பெட்டிகளின் மீது 4 அடுக்கு பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் சோலார் பிளேட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார். நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கண்ணன் கூறுகையில், ஒரு ரயிலில் சூரியசக்தி தகடுகளை பொருத்தி மின்சாரம் தயாரிப்பதன் மூலம் ஓராண்டில் 20 முதல் 25 கிலோவாட் மின்சாரம் கிடைக்கும்

என்பதால் மின்சார தயாரிப்புக்காக ஓராண்டுக்கு செலவாகும் 700 லிட்டர் டீசல் மிச்சமாகும் என்றார்.

காற்று மாசு குறையும்

காற்று மாசு குறையும்

இத்திட்டம் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை வெகுவாக குறைக்கும் திட்டம் என்று கூறினார். குறிப்பாக, ஓராண்டுக்கு டீசல் பயன்படுத்துவதால் 4,396 எச்.எஸ்.யு. அளவு கார்பன் மோனாக்சைடு காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துவதை தடுக்க முடியும் என்றும் சூரியசக்தி திட்டத்தில் பராமரிப்பு செலவு மிகவும் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Indian Railways main event of the Green Project has started. Southern Railways producing 'Go Green Couch' train couches. First time in South India Solar Power couches are going introduce in the train as soon as possible. The train will be operated in the route of Coimbatore-Mayiladuthurai. The train sets with Solar Power plates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X