For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன அழுத்தமா..டென்சனா... மன நோயா...மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுங்க - புதிய ஆய்வில் தகவல்!

Google Oneindia Tamil News

டெல்லி: மீன் எண்ணெய்யில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மன நோய்களுக்கு மருந்தாவதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மீன் எண்ணெய் மாத்திரைகளை 12 வார காலத்திற்கு கொடுத்ததில் பெரும்பாலானவர்களுக்கு மனப் பாதிப்புகள் மற்றும் மன நோய்கள் தடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக மக்களிடையே பரவலாக மீன் எண்ணெய் மாத்திரைகள் உண்ணப்பட்டு வருகின்றன.

Fish oil supplement could block psychotic disorders of young people: Study

செல் சவ்வுகளில் அமிலங்கள்:

இவற்றில் உள்ள ஆல்பா லீனோலிக் போன்ற அமிலங்கள் மனித உடம்பின் செல் சவ்வுகளில் காணப்படுகின்றன. இவை ஹார்மோன்கள் சுரக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இயற்கை வைத்தியத்திற்கு:

சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இயற்கை வைத்தியத்திற்காக மீன் எண்ணெய் மாத்திரைகளை தேர்வு செய்வது தௌிவாகி உள்ளது.

ஆண்டு தோறும் 120 கோடி:

மீன் எண்ணெய்க்காக ஆண்டு தோறும் அமெரிக்கர்கள் 120 கோடி டாலர்களை செலவழிப்பதாக அந்த கருத்துக் கணிப்பில் மேலும் தௌிவாகிறது.

மன நல பாதிப்பு நபர்கள்:

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலை பேராசிரியர் பால் ஆம்னிகர் இது சம்பந்தமாக ஓர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் 13 முதல் 25 வயதுக்குட்பட்ட மன நலம் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

நல்ல முன்னேற்றம்:

மொத்தம் 81 பேரில் 41 பேருக்கு மீன் எண்ணெய்யும், மீதி 40 பேருக்கு சாதரண மன நல சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. மீன் எண்ணெய் கொடுக்கப் பட்ட 41 பேரில் 39 பேருக்கு மன ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சாதாரண சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 29 பேருக்கு மட்டுமே மன ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A follow-up research proves young people at high risk were less likely to suffer psychotic disorders by daily intake of fish oil supplements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X