For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த காசில் சென்றுதான் பேரிடர் காலத்தில் உயிர்களை காப்பாற்றுகிறேன்.. இது என் கடமை.. மீனவர் ஜெய்சன்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளத்தில் பெண்களுக்காக முதுகை படிக்கட்டாகிய மீனவர் விவரம்...

    மலப்புரம்: சொந்த காசில் சென்றுதான் பேரிடர் காலங்களில் உயிர்களை காப்பாற்றுகிறேன். இது என் கடமை என்று கேரளா மீனவர் ஜெய்சன் கூறியுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது முப்படை வீரர்களுடன் மீனவர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அவ்வாறு மீட்பு பணிகளின் போது ஜெய்சன் என்ற 30 வயது மீனவ இளைஞர் பெண்களுக்காக தனது முதுகை படிக்கட்டாக மாற்றிய தருணம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.

    இவர் தனூர் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள பெண்கள் மீட்பு படகில் ஏறுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து சற்று யோசிக்காமல் ஜெய்சன் படகிற்கு பக்கத்தில் படுத்து கொண்டு தனது முதுகை படிக்கட்டாக மாற்றினார்.

    எனது பணியின் ஒரு பகுதி இது

    எனது பணியின் ஒரு பகுதி இது

    இதுகுறித்து அவர் மலையாள சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண்களால் படகில் ஏற முடியவில்லை. படகு ஆடி வந்ததால் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து நான் கீழே படுத்து அவர்களுக்கு ஏற உதவினேன். இதை எனது வேலையாகவே கருதுகிறேன். இதை பெரிதாக எடுக்கவில்லை. எனது பணியில் ஒரு பகுதிதான்.

    உயரமான இடத்தில்

    உயரமான இடத்தில்

    மாதவிடாய் காலத்தில் இருந்த பெண் ஒருவர் முகாமில் இருப்பதாக ஏற்கனவே எங்க கிட்ட சொல்லி இருந்தார்கள். அந்த காலகட்டத்தில் பெண்களால் உயரமான இடத்தில் கால் வைத்து ஏற முடியாது.

    முதுகை படிக்கட்டாக...

    முதுகை படிக்கட்டாக...

    இதை எங்களுக்கு கேம்ப்ல சொல்லி கொடுத்து இருக்காங்க. அதனால்,
    அத்தனை மக்களுக்கு மத்தியில் அவங்க என் மேலே ஏறியாது போகட்டும்ன்னுதான் என் முதுகை படிக்கட்டாக மாற்றினேன்.

    மலப்புரம் கேம்ப்

    மலப்புரம் கேம்ப்

    அங்க ஒரு படி இருந்தது, அதுல ஏறினா வழுக்கும். முதல்ல அதுல ஏற சொல்லலாம்னு இருந்தோம். ஆனால் வழுக்கும்னு நான்தான் தானா குனிச்சிக்கிறேன்ன்னு சொன்னேன், எனக்கு மலப்புரம் கேம்ப்ல இதுக்கு டிரைனிங் கொடுத்து இருக்காங்க.

    காலையில் போவேன்

    காலையில் போவேன்

    வீட்டுல இதை பத்தி எடுத்து சொல்ல வேண்டிய நிலை இல்லை. கேரளாவில் அப்படித்தான் இருக்கும். நான் எப்போதும் காலைல போயிட்டு ராத்திரி வருவேன். இதுதான் என் வேலை. இதுல எனக்கு சம்பளம் கிடையாது. என்னோட சொந்த பணத்தை வச்சுதான் பெட்ரோல் போட்டு இப்படி உதவி இருக்கேன். இதுல எனக்கு எந்த வருமானமும் இல்லை என்றார்.

    English summary
    Malappuram fisherman Jaison who gives his back to step into the boat says that its his duty to help the people. Bending his back to people is one of his duty to rescue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X