For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் சோப்பு பார்சேல்.. மோசடி செய்த பிளிப்கார்ட்!

மும்பையை சேர்ந்த நபர் ஒருவருக்கு பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோனுக்கு பதில் சோப் டெலிவரி செய்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் சோப்பு பார்சேல்..வீடியோ

    மும்பை: இப்போது இணையத்தளத்திலேயே பொருட்களை வாங்கும் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் அதிகம் ஆகிவிட்டது. சிறுசிறு பொருட்கள் தொடங்கி அதிக விலையுள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் வரை அனைத்தும் இணையம் மூலமே வாங்கப்படுகிறது.

    இதில் சமயங்களில் குளறுபடியும் நடக்கிறது. சரியான நேரத்தில் பொருட்களை கொண்டுவராதது, உள்ளே மோசமான நிலையில் பொருட்களை வைத்து இருப்பது என சில பிரச்சனை எழும்பி இருக்கிறது.

    அப்படித்தான் தற்போது மும்பையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஐஃபோன் ஆர்டர் செய்த நபருக்கு டிடர்ஜென்ட் சோப் டெலிவரி செய்யப்பட்டு இருக்கிறது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    மும்பையை சேர்ந்த நபர் தப்ராஜ் மெஹபூப் நெஹ்ராலி என்பவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் பிளிப்கார்ட்டில் 55 ஆயிரம் கொடுத்து ஐஃபோன் 8 ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் அவருக்கு ஐஃபோனுக்கு பதிலாக துணி துவைக்கும் சோப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    போலீஸ்

    போலீஸ்

    இதுகுறித்து அவர் கஸ்டமர் கேரிடம் விளக்கம் கேட்டதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் அவர் மும்பை போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். பிளிப்கார்ட் மீது மோசடி புகார் கொடுத்து இருக்கிறார்.

    பிளிப்கார்ட் பதில்

    பிளிப்கார்ட் பதில்

    இதற்கு பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்து இருக்கிறது. இதுகுறித்து அலுவலக பணியாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றுள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை செய்யப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    கண்டனம்

    இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆகியது. இவர் ''இதுதான் உங்கள் கஸ்டமர் சர்விஸா? ஐஃபோனுக்கு பதில் சோப் அனுப்பி இருக்கிறீர்களா? உங்களுடைய கஸ்டமர்கள் சரியான பொருட்களை பெறுகிறார்களா என்று நீங்கள் தான் கவனிக்க வேண்டும். எல்லாவற்றிற்கு கஸ்டமர்களை குறை சொல்ல கூடாது'' என்றுள்ளார்.

    English summary
    Flipkart delivers soap to customer named Tabrej Mehaboob Nagrali instead of I Phone 8 in Mumbai. Tabrej Mehaboob Nagrali complains in the police against Flipkart.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X