For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உடைந்து விழுந்த கொள்ளிடம் பாலம்.. கலக்கத்தில் மக்கள்.. அதிர்ச்சி வீடியோ

கொள்ளிடத்தில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க மக்கள் அங்கே அதிக அளவில் கூடி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உடைந்து விழுந்த கொள்ளிடம் பாலம்.. கலக்கத்தில் மக்கள்- வீடியோ

    பெங்களூர்: கொள்ளிடத்தில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க மக்கள் அங்கே அதிக அளவில் கூடி வருகிறார்கள். மிகவும் பழமையான பாலம் உடைந்ததால் அவர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

    திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. நேற்று இரவு இந்த பாலம் உடைந்தது.

    கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக நீர் வருவதால் இந்த பாலம் உடைந்துள்ளது. தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    விரிசல் அதிகமாகி உடைந்துள்ளது.

    விரிசல் அதிகமாகி உடைந்துள்ளது.

    தமிழகத்திற்கு 2.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. முதலில் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது. நேரம் போக போக பாலத்தின் தூணில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகி உடைந்துள்ளது.

    காரணம் என்ன

    காரணம் என்ன

    இந்த பாலம் உடைந்ததற்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. முதல் காரணமாக,காவிரியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இந்த பாலத்தை கடந்த 10 வருடமாக கொஞ்சம் கூட பராமரிக்கவில்லை. இதனால் நலிவிடைந்த பாலம் உடைந்துள்ளது.

    பதற வைக்கும் காட்சி

    பதற வைக்கும் காட்சி

    இந்த கொள்ளிடம் பாலம் உடையும் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நல்ல நிலையில் இருக்கும் பாலம், கொஞ்சம் விரிசல் அடைந்து அப்படியே உடைந்து போய் இருக்கிறது. சரியாக 18வது தூணில் ஏற்பட்ட பிரச்சனை அப்படியே பாலத்தை உடைத்துள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    மக்கள் கலக்கம்

    இதனை நேற்று இரவில் இருந்து மக்கள் பார்வையிட்டு இருக்கிறார்கள். மிகவும் பழமையான பாலம் உடைந்ததால் மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளார். அரசின் அலட்சியம்தான் காரணம் என்று இதுகுறித்து அவர்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

    இந்த வீடியோவை திருச்சி மாவட்டம் லால்குடியிலிருந்து ஜெய்கார்த்திக் நாகரத்தினம் என்ற ஒன் இந்தியா தமிழ் வாசகர் சுட சுட அனுப்பியுள்ளார்.

    English summary
    Flood in Cauvery: Video of Kollidam Steel bridge collapse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X