For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் கனமழை.. கர்னூல் மகா நந்தீஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்னூல் மகாநந்திஸ்வரர் கோயிலுக்குள் புகுந்து ஆர்பரித்து ஓடும் வெள்ளம்.. வீடியோ

    அமராவதி: ஆந்திராவின் குண்டு ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கர்னூல் மாவட்டம் மகாநந்தி கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து ஆர்ப்பரித்து ஓடுகிறது.

    தென்மேற்கு பருவமழை காரணமாக ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதி மற்றும் கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அபாயகட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

     Flood water enters the premises of Mahanandiswara Swamy Temple in Kurnool district

    இதேபோல் ஆந்திராவில் மற்ற நதிகளிலும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடப்பா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 1251 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதேபோல் சிம்ஹார்திபுரம் மண்டல் பகுதியில் 89.5 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

     Flood water enters the premises of Mahanandiswara Swamy Temple in Kurnool district

    இந்நிலையில் ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் பாய்ந்தோடுகிறது குண்டு ஆறு. இந்த ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான நந்தியாலா பகுதியில் 22 செ.மீ மழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக இயல்பை விட அதிக அளவில் மழை பெய்த காரணத்தால் குண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்னூல் மாவட்டம் மகாநதியில் உள்ள மகாநந்தீஸ்வரர் கோயிலுக்குள் வெள்ளம் 3 அடிக்கு மேல் பாய்ந்தோடுகிறது. இதனால் கோயிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கனமழை காரணமாக கடப்பா மற்றும் கர்னூல் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Andhra Pradesh: Mahanandi Temple in Kurnool district's Mahanandi gets flooded following incessant heavy rainfall since last night. Kundu river in the district is overflowing with flood water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X